/indian-express-tamil/media/media_files/2025/09/21/coomapatti-3-2025-09-21-18-35-53.jpg)
கூமாபட்டி ஊர் மக்கள் ஆரவாரத்துடன் சுற்றி நிற்க கூமாபட்டி தங்கப்பாண்டி, சாந்தினி இருவரும் ஊர்மக்களுடன் சேர்த்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோ மீடியோ டோர் யூடியூப் சேனலில் வெளியாகி சமூக வலைத்களங்களில் வைரலாகி வருகிறது. Photograph: (Image Source: YouTube/ Media Door)
கூமாபட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தன்னுடன் இணைந்து போடியாளராக பங்கேற்று வரும் நடிகை சாந்தினியை தனது சொந்த ஊரான கூமாப்பட்டிக்கு அழைத்து சென்று ஊர் மக்களுடன் செம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ஒரே ரீல், ஒரே நாளில் உலகப் புகழ் பிரபலம் என்றால் அது கூமாபட்டி தங்கப்பாண்டிக்குதான் பொருந்தும். “ஏங்க... இதோ பாருங்க விருதுநகர் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு ஐலேண்ட்” என்று தங்கப்பாண்டி போட்ட கூமாபட்டி ஐலேண்ட் ரீல் உலக அளவில் வைரலானது. தங்கப்பாண்டியின் ரீல்ஸைப் பார்த்து, விருதுநகர் மாவட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பலரும், கூமாபட்டி ஐலேண்ட் எங்கே இருக்கிறது என்று படையெடுத்தார்கள். ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூமாப்பட்டி ஐலேண்ட் எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கிவிட்டார்கள். அதற்கு காரணம் தங்கப்பாண்டிதான். இந்த ரீல்ஸ் பிரபலமானதிலிருந்து தங்கப்பாண்டி, கூமாப்பட்டி தங்கப்பாண்டி என பிரபலமாகிவிட்டார்.
இந்த சூழலில்தான், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிங்கிள் பசங்க ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பாளராக கூமாப்பட்டி தங்கப்பாண்டி பங்கேற்றார். அது மட்டுமல்ல, நடிகை சாந்தினி இணை போட்டியாளராக வந்தார். சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாபட்டி தங்கப்பாண்டியுடன் சாந்தினியின் டூயட் கெமிஸ்ட்ரி பெர்ஃபார்மன்ஸ் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தது. கூமாபட்டி தங்கப்பாண்டி - சாந்தினி டூயட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கூமாபட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன்னுடன் ஜோடியாக நடிக்கும் நடிகை சாந்தினியை தனது சொந்த ஊரான கூமாபட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். சாந்தினியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து ரசித்த கூமாபட்டி மக்கள், சாந்தினியை நேரில் பார்த்ததும் உற்சாகம் அடைந்த மக்கள் மேளதாளத்துடன் அவரை வரவேற்றனர். அதுமட்டுமல்ல, ஊர் மக்கள் ஆரவாரத்துடன் சுற்றி நிற்க கூமாபட்டி தங்கப்பாண்டி, சாந்தினி இருவரும் ஊர்மக்களுடன் சேர்த்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோ மீடியோ டோர் யூடியூப் சேனலில் வெளியாகி சமூக வலைத்களங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடிகை சாந்தினியுடன் கூமாபட்டிக்கு சென்ற தங்கப்பாண்டி, அவரது ஸ்டைலில் “ஏங்க இங்க பாருங்க... எங்க ஊரு எவ்வளவு அழகா இருக்கு பாருங்க’ என்று கூறி உற்சாகப்படுத்துகிறார்.
நடிகை சாந்தினி, “உங்களையெல்லாம் பார்ப்பதற்காகத்தான் சென்னையில் இருந்து கூமாபட்டி வந்திருக்கிறேன். சாப்பிடவில்லை என்றால், கூமாபட்டி மக்கள் சாப்பாடு போடுவார்கள் என்று சொன்னாங்க” என்று சாந்தினி கூறுகிறார்.
சாந்தினியை நேரில் பார்த்து அவருடன் நடனம் ஆடி மகிழ்ந்த மக்களிடம், உங்களுடைய ஊரின் பெருமை இதோ நிற்கிறார் பாருங்கள் என்று நடிகை சாந்தினி அருகில் நிற்கும் தங்கப்பாண்டியைக் காட்டுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.