அப்பா நல்லவரா? கெட்டரவா? ஆசை மகளிடம் கேள்விக் கேட்ட சாக்‌ஷி!

ஜிவா என்ன பதில் அளித்து இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தோனியின் செல்ல மகள் ஜிவாவிடம், சாக்‌ஷி தோனி நாயகன் ஸ்டலில் அப்பா நல்லவரா? கெட்டவரா?  என கேட்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிவா தோனி அட்டகாசங்கள்:

தோனியின் மகள் ஜிவாவுக்கு  சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பல நேரங்களில் தோனியின் வீடியோவை விட  ஜிவாவின் க்யூட் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று   உள்ளனர்.

ஜிவா தோனி  இணையதளத்தில் ஒரு வைரல் நாயகி. களத்தில் தல தோனியின் பேட்டிங்க்கை ரசிப்பவர்கள், இணையதளத்தில் ஜிவாவின் மழலை பேச்சை ரசிப்பார்கள்.  பாடுவது, ஆடுவது, சமைப்பது,   விளையாடுவது என ஜிவாவின் வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிடுவது தான் தோனியின் மனைவி சாக்‌ஷியின் வேலை.

அதே வேலையைத்தான்  சாக்‌ஷி மறுபடியும் பார்த்துள்ளார்.  இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருவதால் கிரிகெட் வீரர் தோனி தன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு நேரம் என்றாலே தன் மகள் ஜிவாவுடன் தான் தோனி நேரத்தை செலவழிப்பார். அந்த வகையில்,தோனி ஜிவாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சாக்‌ஷி ஜிவாவை அழைத்து அப்பா நல்லவரா? கெட்டவரா என கேட்கிறார்.

Very smart

A post shared by M S Dhoni (@mahi7781) on

இதற்கு ஜிவா என்ன பதில் அளித்து இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அங்குத்தான் ட்ஸ்வீட் வைத்தார் ஜிவா. அப்பா மட்டுமில்ல எல்லோருமே நல்லவர்கள் தான் என்று ஸ்மார்ட் பதிலைக் கொடுத்து சாக்‌ஷியின் வாயை மூடுகிறார் க்யூட் ஜிவா.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வழக்கம் போல் வைரலாக பரவி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close