தோனியின் செல்ல மகள் ஜிவாவும், காதல மனைவி சாக்ஷியும் கல்யாண வீட்டில் டான்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தோனியின் மகள் ஜிவாவுக்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பல நேரங்களில் தோனியின் வீடியோவை விட ஜிவாவின் க்யூட் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிக லைக்ஸ்களை பெற்று உள்ளனர்.
ஆனால் இம்முறை வெளியான வீடியோவில் ஜிவா மட்டுமில்லை கூட சேர்ந்து சாக்ஷியும் கலக்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேல் - நமித் சோனி திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த திருமண விழாவில் பிரபல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் முதல் நாள் நடைப்பெற்ற மெஹந்தி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்தோனி தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துக் கொண்டார்.
இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இந்த வீடியோவில் தோனியில் செல்ல மகள் ஜிவாவும், அவரது மனைவி சாக்ஷியும் ஒன்றாக சேர்ந்து இந்தி பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். இதனை ஓரத்தில் நின்றுக் கொண்டு தோனி பார்த்து கைத்தட்டி ரசிக்கிறார்.
இந்த வீடியோ தோனியின் ரசிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த தோனி மற்றும் அவரது மகளின் தீவிர ரசிகர்கள் வழக்கம் போல் வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இன்னும் சிலர், ஒருவேளை எதிர்க்காலத்தில் சாக்ஷிக்கும் - ஜிவாவுக்கும் நடனப்போட்டி வைத்தால் தோனியின் ஆதரவு யாருக்கு? என்றும் கேள்விகளை எழுப்பி இணையத்தை அதகளப்படுத்தி வருகின்றனர்.