/tamil-ie/media/media_files/uploads/2018/11/ziva-dhoni....jpg)
Ziva Dhoni Viral Tamil Video, MD Dhoni Ziva Viral Tamil Video, டோனி மகள் ஸிவா தமிழ் வீடியோ, ஸிவா டோனி தமிழ் வீடியோ
MS Dhoni Daughter ziva Cute Tamil Video: தல டோனி தனது மகள் ஸிவாவுடன் தமிழில் உரையாடும் வீடியோ செம வைரல் ஆகியிருக்கிறது. ஸிவாவின் கொஞ்சும் தமிழை கேட்க வேண்டுமே! இவர்களின் தமிழ் பேச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். 'சூப்பர் தல’ என பாராட்டையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு இரண்டாவது தாய் வீடு என்பதை சொல்லத் தேவையில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான அவரை, ‘தல’ என தமிழ் ரசிகர்கள் செல்லமாக அழைத்து மகிழ்கிறார்கள்.
Ziva - MS Dhoni Tamil Viral Video: ஸிவா மகேந்திரசிங் டோனி வைரல் தமிழ் வீடியோ:
டோனியும் அவ்வப்போது தனது தமிழ்நாட்டுப் பாசத்தை காட்டுவது வழக்கம். முதல் முறையாக தமிழ்ப் பாசத்தையும் காட்டி அவர் தனது மகளுடன் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருப்பதுதான் ஹாட்!
Thamizh Vaazhthu from #Thala when cub Ziva asks the right questions! #WhistlePodu#Yellove ???????? VC: #Thala@msdhonipic.twitter.com/uqDteUrI2t
— Chennai Super Kings (@ChennaiIPL) 24 November 2018
ஆஸ்திரேலிய டி 20 தொடரில் இடம் பெறாமல் ஓய்வில் இருக்கும் டோனி தனது மகளுடன் நேரம் செலவழித்த நேரத்தில் இந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார். ‘எப்படி இருக்கீங்க’ என கொஞ்சும் தமிழில் ஸிவா கேட்க, ‘நல்லா இருக்கேன்’ என டோனி பதில் சொல்லும் வீடியோ அது.
இந்த வீடியோவை டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இரண்டு மொழிகளில் வாழ்த்து என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். டோனியின் இந்த வீடியோவுக்கு அவரது தமிழ் ரசிகர்கள் செமையாக ரெஸ்பான்ஸ் செய்து வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்கள். அதற்கு தமிழ் ரசிகர்கள் பெருமளவில் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். ‘சூப்பர் தல’ என பாராட்டியும் வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.