இரண்டு இளைஞர்கள் "இந்தி தேசிய மொழி" என்று எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்தபடி கருத்து எழுதி புகைப்படம் வெளியிட்டனர். இந்த பதிவு சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு பதிலளித்தார். மேலும் அந்த பதிவில் "பெங்களூரு பயணத்திற்கு சரியான டி-ஷர்ட்" என்ற கேப்ஷனும் இருந்தது.
இதற்கு X தளத்தில் பதிலளித்த ஸ்ரீதர் வேம்பு, உங்கள் சென்ட்டிமென்டை நான் ஏற்கிறேன். ஆனால் நீங்கள் பெங்களூரில் வசிக்கிறீர்கள் என்றால் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகளும் கன்னடம் கற்று கொடுக்க வேண்டும்.
பெங்களூருவில் பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் நிலையில், இதை செய்யாமல் இருப்பது அவமரியாதை. எங்கள் நிறுவனத்தில் சென்னையில் பணிபுரியும் பிற மாநில ஊழியர்களையும் தமிழை கற்க முயற்சி செய்யுமாறு நான் அடிக்கடி கேட்டுக் கொள்வேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கு வரவேற்பும், ஏதிர்ப்பும் எழுந்து வருகிறது. எக்ஸ் பயனர் ஒருவர், மும்பையில் எனக்கு பல கன்னட நண்பர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக இங்கு வசிக்கின்றனர். அதில் எவருக்கு ஒரு வார்த்தை கூட மராத்தி பேசத் தெரியாது. நியாயமா?” என்று கேட்டார்.
மற்றொருவர், “நீங்கள் இங்கு முதிர்ச்சியடையவில்லை. எந்த மொழியையும், கலாச்சாரத்தையும் அவமரியாதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது அவமரியாதையா? உங்கள் லாஜிக் அங்கேயே இறந்து விடுகிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“