/indian-express-tamil/media/media_files/2025/08/12/zomato-agent-2025-08-12-20-22-38.jpg)
'ரூ.10 போனஸை விட உயிர் முக்கியம்'.. திறந்த வடிகாலில் விழுந்த ஸொமேட்டோ ஊழியர்; வீடியோவால் எழுந்த சர்ச்சை!
ஹைதராபாத்தில் பெய்த கனமழையால், சனிக்கிழமை அன்று உணவு விநியோக ஊழியர் ஒருவர் திறந்த வடிகாலில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியில் இருந்த சையது பர்ஹான் என்பவர் தனது இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து வடிகாலில் விழுந்தபோது, அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவ விரைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
🚨 Hyderabad | 9 Aug 2025, 9:30 PM Near TKR Kaman, @zomato delivery Worker falls into drainage during heavy rain — bike & phone gone. ₹10 rain bonus = worker’s life, @deepigoyal❓ 💔@TelanganaCMO@revanth_anumula@Ponnam_INC@VivekVenkatswam#TGPWU#ShaikSalauddin#GigWorkerspic.twitter.com/z5lnPAvFGM
— Telangana Gig and Platform Workers Union (@TGPWU) August 10, 2025
இந்த விபத்தில் ஃபர்ஹானின் செல்போன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவரது இருசக்கர வாகனமும் பலத்த சேதமடைந்தது. வீடியோவில் ஒருவர், "இந்த பைப்பை எடுத்து வண்டியில் கட்டுங்கள், நாம் சேர்ந்து வெளியே இழுக்கலாம்" என்று சொல்வது கேட்கிறது. பலரின் உதவியுடன், ஃபர்ஹானும் அவரது இருசக்கர வாகனமும் கடும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
தெலங்கானா கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் சங்கத்தின் (TGPWU) தலைவர் ஷேக் சலாவுதீன், "இது வெறும் விபத்து அல்ல, லாபத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனங்களின் நேரடி விளைவு இது. ஃபர்ஹான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ஆனால், நாளை இது வேறு ஒரு தொழிலாளருக்கு நேரலாம்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சமூக வலைத்தள பயனர்கள் இந்தச் சம்பவத்திற்காக அரசு அதிகாரிகளையும், திறந்த வடிகால்கள் மற்றும் பழுதடைந்த சாலைகளைச் சீர் செய்யாத அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், சிலர் நிறுவனங்களின் லாப நோக்கம் கொண்ட கலாச்சாரத்தையும் சாடியுள்ளனர். ஒரு பயனர், "இன்றைய இந்தியாவில், மனித உயிரை விட லாபம் முக்கியமாகிவிட்டது. ஸொமேட்டோ போன்ற நிறுவனங்கள் ஊழியர்களின் நலனை விட, பங்குதாரர்களின் வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "இது ஸொமேட்டோவின் தவறு அல்ல, இப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான வடிகால்களை மூடுவதற்கு தவறிய அரசாங்கமே பொறுப்பு. அவர் ஒரு ஸொமேட்டோ ஊழியராக இல்லாமல் வேறு யாராக இருந்திருந்தாலும், இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, TGPWU தொழிற்சங்கம் உணவு விநியோக நிறுவனங்களை கடுமையாக விமர்சித்துள்ளது. லாபத்திற்காக ஊழியர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஃபர்ஹானின் தொலைந்த செல்போனை மாற்றித் தரவும், அவரது இருசக்கர வாகனத்தை சரிசெய்யவும், இந்த நாட்களில் அவருக்கு ஏற்பட்ட வருமான இழப்பிற்கு இழப்பீடு வழங்கவும் ஸொமேட்டோ நிறுவனத்தை தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. "இது 10 அல்லது 15 ரூபாய் மழைக்கால போனஸ் பற்றியது அல்ல, ஒரு தொழிலாளி உயிருடன் வீட்டிற்குத் திரும்புகிறாரா என்பது பற்றியது" என்றும் ஷேக் சலாவுதீன் ஆவேசமாகத் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.