பசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்... சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்!

மீண்டும் தான் எச்சில் செய்த உணவை புதியது போலவே எவ்வித சந்தேகமும் வராமல் மடித்து வைக்கிறான்

மீண்டும் தான் எச்சில் செய்த உணவை புதியது போலவே எவ்வித சந்தேகமும் வராமல் மடித்து வைக்கிறான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விக்னேஷ் சிவன் ட்விட்டர்

விக்னேஷ் சிவன் ட்விட்டர்

நேற்று காலை முதல் ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சிகள் இவை தான்.. “வண்டிகள் அதிகம் செல்லாது ஒரு பாலத்தில் நின்றுக் கொண்டு ஒருவர் வேக வேகமாக ஒரு பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடுகிறார்.

Advertisment

யாரெனும் பார்க்கிறார்களா? வீடியோ எடுக்கிறார்களா? என்பதைப்பற்றியெல்லாம் அவர் நினைக்க கூடவில்லை பரபரப்பாக இன்னும் சொல்ல போனால் ஸ்பூனை கூட விட்டுவைக்கமால் அவ்வளவு ருசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு, அந்த பொட்டலத்தை மீண்டும் பழையது போலவே சில்வர் காயில் பேப்பருடன் சுருட்டி வைக்கிறார்.

அந்த நபர் வேறு யாருமில்லை. பிரபல ஆன்லைன் உணவு டெலவரியான சோமேட்டோ நிறுவனத்தின் மதுரைக்கிளையில் வேலை செய்பவர். அவர் சாப்பிட்டது டெலிவரிக்கு கொண்டு போகவிருக்கும் மற்றொரு ஆர்டர் செய்த உணவைத்தான்.”

இந்த வீடியோவை பார்த்த பலரும் சரமாரியாக அந்த ஊழியரின் மீது கோபத்தை காட்ட துவங்கினர். அந்த வீடியோவில் வந்த நபரை கண்டமெனிக்கு திட்டி கருத்துக்களையும் பதிவு செய்தனர். டெலிவரி செய்யும் உணவை உரிமையாளருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக உண்பது மிகப்பெரிய தவறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisment
Advertisements

அதே நேரத்தில் அவர் சாப்பிட்டதை எந்தவிதத்தில் நாம் குறை கூற முடியும் என்று தெரியவில்லை. கடுமையான பசியில் ஒருவன் செல்கிறான். அவனிடம் வகை வகையான உணவுகள் இருக்கின்றன. ஆனால் அவை எதுவுமே அவனுக்கு சொந்தமில்லை. பசியின் கொடுமை ஒருபுறம் என்றால், அது தரும் வாசனை இன்னும் அதிக பசியை தருகிறது.

பொறுத்து பொறுத்து பார்த்தவன் தனது கட்டுப்பாட்டை இழந்து அதை எடுத்து சாப்பிட்டு விடுகிறான். பின்பு அய்யயையோ டெலிவரி செய்ய வேண்டும்? இல்லையென்றால் வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்று மீண்டும் தான் எச்சில் செய்த உணவை புதியது போலவே எவ்வித சந்தேகமும் வராமல் மடித்து வைக்கிறான்.

விக்னேஷ் சிவன் ட்விட்டர் :

இந்த வீடியோவை பார்த்த பலருக்கு கோபம் வந்தது இந்த இடத்தில் தான். சாப்பிட்டதை கூட மன்னித்து விடலாம். ஆனால் அதை நம்பி வாங்கி சாப்பிட போகும் கஸ்டமரை இப்படி ஏமாற்றியது மாபெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாத, தினமும் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் பொதுமக்கள் அந்த ஊழியரை செயலை வறுத்தெடுத்தன.

இப்படி இந்த வீடியோ குறித்து பலரும் பலவிதமாக கருத்துக்களை கூறி வரும் இந்நேரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது தரப்பு கருத்தை கூறி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.இதுக் குறித்து விக்னேஷ் பதிவிட்டுள்ள ட்விட்டில், பொறுப்பை மறக்கடித்த பசியின் கொடுமை...பாவம். மன்னிப்போம், மறப்போம், அட்டூழியம் அல்ல ... பசி ???????? .. என்று கூறியுள்ளார்

.

விக்னேஷ் சிவனின் கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர். ஏனெனில் பலரும் அவர் நினைத்தைப்போல தான் உணர்ந்தார்களோ என்னவோ?

Social Media Viral Vignesh Shivan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: