“அவன் கூலி வேலைக்கு போறான்னு நினைச்சியா? கூலி படத்துக்கு போறான் டி அவன்” நெட்டிசன்களின் கலாய் மீம்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள'கூலி' திரைப்படம் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் மீம்கள் நிரம்பி வழிகின்றன. ரஜினி ரசிகர்களைத் தாண்டி, பொதுவான நெட்டிசன்களும் இந்தப் படத்தைப் பற்றிப் பலவிதமான நகைச்சுவையான மீம்களைப் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள'கூலி' திரைப்படம் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் மீம்கள் நிரம்பி வழிகின்றன. ரஜினி ரசிகர்களைத் தாண்டி, பொதுவான நெட்டிசன்களும் இந்தப் படத்தைப் பற்றிப் பலவிதமான நகைச்சுவையான மீம்களைப் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coolie meme x

கூலி படத்தின் மீம்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள'கூலி' திரைப்படம் வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் மீம்கள் நிரம்பி வழிகின்றன. ரஜினி ரசிகர்களைத் தாண்டி, பொதுவான நெட்டிசன்களும் இந்தப் படத்தைப் பற்றிப் பலவிதமான நகைச்சுவையான மீம்களைப் போட்டுத் தாக்கி வருகின்றனர். அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

Advertisment
Coolie meme 4
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் பற்றிய நெட்டிசன்களின் மீம்

ரஜினிகாந்த் இந்தப் படத்தில் ரூ. 200 கோடி சம்பளம் வாங்குவதாக வெளியான செய்தி, மீம் கிரியேட்டர்களுக்கு முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது.  “கூலி படத்துல கூலி வேலை பாத்ததும்… அந்த படத்துக்கு 200 கோடி சம்பளம் வாங்குனதும் ஒரே ஆளா…” எனப் பிரகாஷ்ராஜ் பேசிய கலாய் வசனத்தை இணைத்து மீம் உருவாக்கியுள்ளனர். இந்தக் கூரிய விமர்சனம் ரஜினியின் சம்பளம் குறித்த விவாதங்களை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Coolie meme 7
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் பற்றிய நெட்டிசன்களின் மீம்

Advertisment
Advertisements

கூலி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரது சினிமா பிரபஞ்சமான 'Lokesh Cinematic Universe' (LCU) மூலம் பிரபலமானவர். ரஜினியின் கூலி படம், LCU-வில் ஒரு பகுதியாக இருக்குமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீம் கிரியேட்டர்கள் விட்டுவைக்கவில்லை. கவுண்டமணி, வடிவேலு பேசும் காட்சிக்கு "அப்புறம் சார், ரோல்ஸ் ராய்சா? இல்லை BMW-ஆ?" என்று கேட்டவுடன், "எதுக்கு லோகேஷ்?" என வடிவேலு கேட்பதுபோல் மீம் உருவாக்கி, "ஜெயிலர் பட வெற்றிக்கு கார் வாங்கி கொடுத்தது போல கூலி வெற்றிக்கும் கார் வாங்கிக் கொடுங்க" என லோகேஷ் கனகராஜ் கேட்பதுபோல் நகைச்சுவை சேர்த்துள்ளனர்.

'கூலி' என்ற தலைப்பு ஏற்கனவே 1995-ல் ஒரு படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கூலி படத்தில் அமீர் கானை ரொம்ப எதிர்பார்த்த ரசிகர்களின் ஏமாற்றத்தை, “யார்டா இவன் வந்த வேகத்துல ரோலக்ஸ் மாதிரி ரெண்டு பேரு தலைய வெட்டி மாஸ் பண்ணுவான்னு பார்த்தா, உபந்திரா கிட்ட கணேஷ் பீடி வாங்கி இழுத்துட்டு இருக்கான்..!” என கிண்டல் செய்துள்ளனர்.

கூலி படத்திற்கு போட்டியாக வெளியாகிய War 2 படத்தை விட்டுவிட்டு பலரும் கூலி படத்தை விமர்சிப்பதால், "அடிவாங்க வேண்டிய 'War 2' நிம்மதியா சுத்திக்கிட்டு இருக்கு. மன்னிக்க வேண்டிய 'கூலி' ரொம்ப அடிவாங்கிக்கிட்டு இருக்கு” என்று நகைச்சுவையாக ஒப்பிட்டுள்ளனர்.

ரஜினியின் பஞ்ச் டயலாக்!

ரஜினியின் 'தலைவர் 171' பட அறிவிப்புக்குப் பிறகு, வெளியான 'தலைவர்' 171 டீசரில், ரஜினியின் வசனத்தை "ஏமாந்துட்டோம்னு நினைக்காத, தப்புச்சுட்டோம்னு நினைச்சாக்கா அது உனக்கு வேணாம்...!" என்று மாற்றி, "எப்படிப்பட்ட வரிகள்" என அவரது வசனத்தை கிண்டல் செய்து மீம் போட்டுள்ளனர்.

மொத்தத்தில், கூலி படம் பற்றிய ஒவ்வொரு சிறிய செய்தியும் மீம்களாக உருமாறி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவை ரஜினிக்கு எதிரான விமர்சனங்கள் என்பதை விட, சமூக வலைத்தளப் பயனர்களின் கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே பார்க்கப்படுகிறது. இந்த மீம்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வீட்டில் அப்பா, அம்மாவிடம் வளர்ந்த பிள்ளைகள், “வீட்டில் சும்மா இருப்பதைவிட கூலிக்காச்சும் போறேன்”னு சொல்லிவிட்டு, ரஜினியின் கூலி படத்துக்கு போவதை, அவர்களின் அப்பா, அம்மாவிடம், “அவன் கூலி வேலைக்கு போறான்னு நினைச்சியா, ரஜினியின் கூலி படத்துக்கு போறான் டி அவன்” என்று கோபி, சுதாகரை வைத்து ஜாலியாக ஒரு மீம் போட்டுள்ளனர்.

கூலி படம் பற்றிய மீம்களை தொகுத்து தருகிறோம்:

Rajinikanth Memes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: