செஃப் தீனாவின் மேற்கு மாம்பலம் ஸ்பெஷல் நெய் மிளகு பொங்கல்: இப்படி செய்தால் குழந்தைங்க விரும்புவாங்க!
சாதம் நன்கு வெந்ததும், அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். இதேபோல் பருப்பு நன்கு வெந்ததும் அதை அப்படியே வடித்த சாதத்தில் ஊற்றி கிளறிவிடவும். மிதமான தீயில் வைக்கவும்.
செஃப் தீனா தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், நெய் மிளகு பொங்கல் எப்படி செய்வது என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.
Advertisment
தேவையான பொருட்கள் (10 பேருக்கு)
பச்சரிசி- அரை கிலோ
பயத்தம் பருப்பு- அரை கிலோ
ரவை- அரை கிலோ
நெய்- கால் கிலோ
மிளகு- 25 கிராம்
சீரகம்- 45 கிராம்
இஞ்சி நறுக்கியது- 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
பெருங்காயம்- தேவையான அளவு
முந்திரி- 100 கிராம்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- அரை லிட்டர்
செய்முறை
பச்சரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் ஊறவைத்த பச்சரிசியை அதில் சேர்க்கவும். இதேபோல் மற்றொரு அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடானதும் பயத்தம் பருப்பை சேர்க்கவும். அரிசியும், பருப்பும் நன்கு வேக வேண்டும்.
சாதம் நன்கு வெந்ததும், அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். இதேபோல் பருப்பு நன்கு வெந்ததும் அதை அப்படியே வடித்த சாதத்தில் ஊற்றி கிளறிவிடவும். மிதமான தீயில் வைக்கவும்.
இப்போது உப்பு, பெருங்காயத்தூள், பொடிதாக நறுக்கிய இஞ்சி, மிளகு சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து கொஞ்சம், கொஞ்சமாக ரவா சேர்த்து கிளறி விடவும். நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் மிளகு சேர்க்கவும் மிளகு நன்கு வெடித்ததும், சீரகம் போட்டு அது பொறிந்து வர கறிவேப்பிலை போடவும். கடைசியில் முந்திரி பருப்பு சேர்க்கவும்.
இந்த தாளிப்பை பொங்கலில் சேர்த்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும். இறுதியாக நெய் ஊற்றி கிளறவும்.
சுவையான நெய் மிளகு பொங்கல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“