பேச்சுலர்ஸ் எல்லாமே ரொம்ப ஈஸியா சுவையா சமைச்சு சாப்பிடுறதுக்கு பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியோட கை வண்ணத்தில் மொரட்டு சிங்கிள் சாம்பார் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 3 1/2 டம்ளர்
உருளைக்கிழங்கு,
கேரட்,
முள்ளங்கி,
மூல மாம்பழம்,
கத்தரிக்காய்
புளி தண்ணீர் 250 மி.லி.
உப்பு 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை
செய்முறை:
2 டீஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி அதில் மிளகாயை கிள்ளி போட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயதூள், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பெரிய வெங்காயம் மற்றும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து கலந்து அதனுடன் கழுவி சுத்தம் செய்த துவரம் பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்றாக வேக வைக்கவும். பருப்பு நன்கு வெந்தவுடன் கடைந்து நறுக்கிய காய்கறிகளை சேர்த்து புளி கரைசல் ஊற்றி தேவையான அளவு உப்பை போட்டு குக்கரில் வேகவைத்து 2 விசில் விட்டு இறக்கவும். பின்னர் கொத்தமல்லி தழைகளை சேர்த்தால் சுவையான முரட்டு சிங்கிள் சாம்பார் ரெடி.