ரஸ்க் ரொட்டி இருந்தா போதும்... கல்யாண வீட்டு பிரட் அல்வா இப்படி ருசியா செய்யலாம்: செஃப் தீனா ரெசிபி

ரஸ்க் ரொட்டியை வைத்து கல்யாண வீட்டு பிரட் அல்வா திண்டுக்கல் பகுதியில் எப்படி செய்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். பிரட் இல்லாமல், ரஸ்க் போட்டு செய்யப்படும் பிரட் அல்வா எப்படி இருக்கு பாருங்க.

author-image
WebDesk
New Update
bread halwa

ரஸ்க் ரொட்டியை வைத்து கல்யாண வீட்டு பிரட் அல்வா திண்டுக்கல் பகுதியில் எப்படி செய்கிறார்கள் என்பதை செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரஸ்க் ரொட்டியை வைத்து கல்யாண வீட்டு பிரட் அல்வா திண்டுக்கல் பகுதியில் எப்படி செய்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். பிரட் இல்லாமல், ரஸ்க் போட்டு செய்யப்படும் பிரட் அல்வா எப்படி இருக்கு பாருங்க.

Advertisment

ரஸ்க் ரொட்டியை வைத்து கல்யாண வீட்டு பிரட் அல்வா திண்டுக்கல் பகுதியில் எப்படி செய்கிறார்கள் என்பதை செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார். ரஸ்க் ரொட்டியை வைத்து கல்யாண வீட்டு பிரட் அல்வா செய்வது எப்படி யாசின் செய்து காட்டியுள்ளார். ரஸ்க் ரொட்டி பிர அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கல்லூரி பேராசிரியராக இருக்கும் யாசின், அவருடைய அப்பா, தாத்தாவிடம் இருந்து சமையலைக் கற்றுக்கொண்டு சமையலையும் செய்து வருகிறார் என்று செஃப் தீனா யாசின் பற்றி அறிமுகம் செய்து வைக்கிறார். 

ரஸ்க் ரொட்டியை வைத்து கல்யாண வீட்டு பிரட் அல்வா செய்வது எப்படி யாசின் கூறுகிறார். பொதுவாக பிரட் அல்வா செய்யும்போது, பிரட்டை எண்ணெயில் வறுத்து எடுப்பார்கள். அதிகமாக வறுத்துவிட்டால், கறுப்பு அடித்துவிடும். இதனால், லேசாக கசப்புத்தன்மை வந்துவிடும். அதனால், அந்த பிரச்னைக்கே போகாமல், ரொம்ப சிம்பிளாக, ரஸ்க் வாங்கி செய்யலாம். 35 பேர் சாப்பிடும் அளவுக்கு கல்யாண வீட்டு பிரட் அல்வா செய்யப்போகிறோம். 

Advertisment
Advertisements

பிரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

ரஸ்க் 1/2 கிலோ 
சர்க்கரை 1 கிலோ
முந்திரி பருப்பு 50 கிராம்
உலர்ந்த திராட்சை 25 கிராம்
ஹார்லிக்ஸ் 35 கிரா
ஏலக்காய் 10
எண்ணெய் 150 மி.லி
நெய் 150 மி.லி

பிரட் அல்வா செய்முறை:

ரஸ்க் வாங்கி ஒன்னும்பாதியுமாக இடித்துக்கொள்ளுங்கள். நைசாக இடிக்கக்கூடாது. அல்லது மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கக்கூடாது. தூளாகவும் அதே நேரத்தில் கட்டி கட்டியாகவும் இருக்க வேண்டும். 

2 - 3 ஸ்பூன் சர்க்கரை போட்டு ஏலக்காயை தூளாக அரைத்டு வைத்துக்கொள்ளுங்கள். அல்லது தட்டி போட்டுக்கொள்ளலாம்.

ரஸ்க் எந்த பாத்திரத்தில் இருக்கிறதோ அதே அளவுக்கு தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். 

ஒரு கடாயை எடுத்து ஸ்டவ் மீது வையுங்கள். அதில் இடித்து வைத்துள்ள ரஸ்க்கைப் போடுங்கள். அதனுடன் முந்திரி பருப்பைப் போடுங்கள். கரண்டியை எடுத்து ஒரு பிரட்டு பிரட்டிவிடுங்கள். கையில் தொட்டுப் பார்த்தால், கையில் லேசாக எண்ணெய் தெரிய வேண்டும். அப்படி எண்ணெய் தெரிந்தால் சரியான பக்குவம். இல்லாவிட்டால், எண்ணெய் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது அடுப்பை பற்ற வையுங்கள். ரஸ்க் தூளை வறுங்கள். நன்றாக கலர் மாறி மணம் வரும். வறுத்தபின், அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். இப்போது, இதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொஞ்ச நேரம் ஆற வைக்க வேண்டும். 

இந்த இடைவெளி நேரத்தில், கடாயை எடுத்து ஸ்டவ்வில் வையுங்கள். ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள். ரஸ்க் எந்த பாத்திரத்தில் எடுத்தோமோ அதே பாத்திரத்தில், அதே அளவுக்கு தண்ணீர் ஊற்றுங்கள். இப்போது தண்ணீரில் சர்க்கரையைப் போடுங்கள். சர்க்கரை போட்ட உடனே கிண்டி விட வேண்டும். நன்றாக கலக்கிவிடுங்கள். அடுத்து அரைத்து வைத்துள்ள ஏலக்காயைப் போடுங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள்.

இப்பொது வறுத்து வைத்துள்ள ரஸ்க் தூளில் 35 கிராம் ஹார்லிக் போட்டு கலந்துவிடுங்கள். 

அதற்குள் அடுப்பில், சர்க்கரை பாகு நன்றாக கொதித்து வந்திருக்கும். இப்போது ஸ்டவ்வில் தீயை சிம்மில் வைத்துவிட்டு, வறுத்து வைத்துள்ள ரஸ்க்  தூளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிண்ட வேண்டும். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். கெட்டியான படத்திற்கு வரும்போது, உலர்ந்த திராட்சையைப் போட வேண்டும். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாக மாறும்போது, 25 மி.லி நெய் ஊற்றி கிண்டுங்கள். கெட்டியானதும், அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள். இப்போது, ஃபிளேவருக்காக, மேலாக, பரவலாக நெய் ஊற்றுங்கள். நன்றாகத் தடவி விடுங்கள். அவ்வளவுதான் பிரட் அல்வா ரெடி.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: