Advertisment

பார்கிங் லொக்கேஷன், சார்ஜிங் ஸ்டேஷன்; கூகுள் மேப்ஸில் இதை கவனிச்சீங்களா?

சமீபத்தில் கூகுள் மேப்ஸ் அப்டேட்டில் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
Gmaps

கூகுள் மேப்ஸ் மிகப் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் நேவிகேஷன் ஆப் ஆகும். ஏராளமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கூகுள் மேப்ஸில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட அம்சங்கள் குறித்துப் பார்ப்போம். 

Advertisment

Glanceable Directions

சில மாதங்களுக்கு முன்பு, கூகுள் "Glanceable Directions" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தில் போன் அன்லாக் செய்யாமல் அப்படியே உங்கள் லொக்கேஷனை பார்க்க முடியும். 

இந்த அம்சம் கூகுள் மேப்ஸ் சென்று நேவிகேஷன் செட்டிங்ஸ் சென்று அங்கு உள்ள Glanceable Directions என்ற ஆப்ஷனை எனெபிள் செய்யவும். 

பார்கிங் லொக்கேஷன்

கூகுள் மேப்ஸின் இந்த அம்சத்தில் உங்கள் இருசக்கர வாகனம், கார் பார்கிங் செய்யப்பட்ட லொக்கேஷனை Save செய்து பின்னர் பயன்படுத்தலாம்.  இதைப் பயன்படுத்த மேப்ஸில் உள்ள ப்யூ புள்ளியை கிளிக் செய்து  ‘Save parking,’ கொடுக்கவும்.  

ஆங்கிலத்தில் படிக்க:    Navigate like a pro: 7 Google Maps features you may have missed

இ.வி பார்கிங் ஸ்டேஷன்

உங்கள் அருகில் உள்ள மின்சார வாகன பார்கிங் ஸ்டேஷனை இந்த அம்சம் மூலம் அறிந்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்த electric vehicle charging stations near me என டைப் செய்து கூகுள் மேப்ஸ் சென்று Electric vehicle settings கிளிக் செய்து, Add plus ஆப்ஷன் கொடுத்து உங்கள் plugs டைப்-ஐ தேர்ந்தெடுக்கவும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment