
ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படமும், சாய் பல்லவி முதன்முதலாக தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படமும் ஒரே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.
சாய் பல்லவி நடித்துள்ள முதல் தமிழ்ப்படமான ‘கரு’, பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, விஜய் இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம், அபார்ஷனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.