
2016-ஆம் ஆண்டு மட்டும் குறைந்தது 5 பத்திரிக்கையாளர்களாவது கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும், கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனங்களையும், தங்கள் அனுதாபங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கவுரி லங்கேஷின் கொலை குறித்த செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் எப்படி குறிப்பிட்டுள்ளன என்பதை பார்ப்போம். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர் என குறிப்பிட்டுள்ளன.
வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்க கவுரி லங்கேஷ் எப்போதும் தயங்கியதில்லை. இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக குரலை உயர்த்தினார் கவுரி லங்கேஷ்.
தனது தந்தை துவங்கிய ‘லங்கேஷ் பத்திரிக்கையின்’ ஆசிரியாராக பணியாற்றிய கௌரி லங்கேஷ், யாருக்கும் பயமில்லாத எழுத்துகளுக்கு சொந்தமானவர்.