Thulam Rasi Palan 2019 (துலாம் ராசி பலன்)

துலாம் ராசி பலன் - நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான். உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்புகளை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச்சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள். பண்டிதர்களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள்.
  • Articles
Result: 420- 423 out of 423 IE Articles Found
rasi palan today

Rasi Palan 22nd April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 22nd April Rasi Palan in Tamil: தோற்றாலும் இனி அடுத்தடுத்து வெற்றி அணிவகுப்பது உறுதி

Rasi Palan 20th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 20th April: இன்றைய ராசிபலன்! உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்க

Rasi Palan Today, 20th April Rasi Palan in Tamil: தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்

Today Rasi Palan in Tamil, 19th April Rasi Palan

Rasi Palan 19th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 19th April Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X