பட்ஜெட் என்றாலே ஒவ்வொரு துறையில் இருப்பவர்களுக்கும் டென்ஷன் தான். அதிலும், சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருமான வரி பற்றிய அறிவிப்பில் தான் கவலை அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், 2019ம் ஆண்டின் பர்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் உட்பட சம்பளம் வாங்கும் மக்கள் அனைவருக்கும் வருமான வரிப் பற்றிய அறிவிப்பை வாசித்து வந்தார் பியூஷ் கோயல்.
வருமான வரி அறிவிப்பு
கடந்த ஆண்டின் பட்ஜெட் அடிப்படையில், 2.50 லட்சத்திற்கும் கீழ் ஆண்டு சம்பளம் வாங்குபவர்கள் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு அந்த தொகையை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பு மக்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தது.
பட்ஜெட் 2019 பற்றிய முழு விவரங்களை அறிய இதை படியுங்கள்
வருமான வரி உச்சவரம்பு 2.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை உயர்வு. நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்குபவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்று அறிவித்தார் பியூஷ் கோயல்.
நிரந்தர கழிவு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு ஒட்டுமொத்த வருமா வரிசலுகையால் 6.25 லட்சம் வரையில் இனி வருமான வரி கட்ட வேண்டிய தேவையில்லை.
இரண்டு வீடுகளுக்கு இனி வீட்டுக்கடன் சலுகை வழங்கப்படும் வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும்.
2வது வீடு வாங்குபவர்களுக்கும் வருமான வரியில் சலுகை வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.40 லட்சமாக உயர்வு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் வரை அனைவருக்கும் வருமான வரி விலக்கு. வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சேமிப்புகளில் முதலீடு செய்பவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு