வருமான வரிச் சலுகை, விவசாயிகளுக்கு உதவி... இன்ப அதிர்ச்சி தந்த தேர்தல் பட்ஜெட் ஹைலைட்ஸ்

Union Budget 2019 Live Updates: இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் 2019 லைவ்

Union Budget 2019: வருமான வரி உச்ச வரம்பு 2.5ல் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு. இதன் மூலம் 3 கோடி பேர் பயனடைவார்கள். டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரிப்பிடித்தம் இல்லை. வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு அளிக்கப்படும். வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி இன்ப அதிர்ச்சிகளை அள்ளித் தெளித்த பட்ஜெட்டாக மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் இது என்பதே பரவலான விமர்சனம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ‘எங்களின் தேர்தல் அறிக்கையை மத்திய அரசு பட்ஜெட்டாக தாக்கல் செய்துவிட்டது’ என கூறியது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் ஹைலைட்ஸ் இங்கே…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பெருமையாக பேசினார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் லைவ்வை ஆங்கிலத்தில் படிக்க :  Union Budget 2019-20 Live Updates 

மேலும்,  ஜி.எஸ்.டி. குறித்தும் பேசிய குடியரசுத் தலைவர், “நாடு முழுவதும் எளிதாக தொழில் செய்யும் நிலை உயர்ந்துள்ளது. வர்த்தகர்கள், தொழில் பிரிவினரிடம் இருந்து அவ்வப்போது வரும் ஆலோசனைகள், கருத்துக்கள் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபின், ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற நிலை நனவாகியுள்ளது” என்றார்.

இந்நிலையில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று (பிப்.1) தாக்கல் செய்கிறார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருப்பதால், அவர் கவனித்து வந்த நிதியமைச்சக பொறுப்பு கடந்த வாரம் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தற்போது தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் தான் – மோடி திட்டவட்டம்

Union Budget 2019 Live Updates: இடைக்கால பட்ஜெட் 2019 கூட்டத்தொடர் லைவ்

4:45 PM: தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவர அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக இடைக்கால பட்ஜெட் குறித்து முத்தரசன் கருத்து

3:30  PM : மத்திய பட்ஜெட் அனைவருக்கும் பொதுவானது, இது புதிய இந்தியாவுக்கான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

3:25 PM  : விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்க இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை குறை கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘தினமும் 17 ரூபாய் வழங்குவது விவசாயிகளுக்கு அவமானம்’ என்றார், ட்விட்டர் பதிவில்.

03: 10  PM: ஏ.சி. அறைகளில் உட்கார்ந்திருப்பவர்களால் சிறிய விவசாயிகளில் சிரமங்களை புரிந்து கொள்ள முடியாது என குறிப்பிட்ட பியூஷ் கோயல், விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வரலாற்று முடிவு என்றார்.

02:50 PM : லோக்சபா எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் அம்சங்கள், தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக இருக்கிறது’ என்றார்.

02:20 PM : ராஜ்நாத் சிங் கருத்து

நம்பிக்கை மிகுந்த, தன்னிறைவுடைய புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார பின்புலம் உடைய நாடாக இந்தியா மாறும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

02:10 PM : ப.சிதம்பரம் கருத்து

ப.சிதம்பரம் கூறுகையில், ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய அரசு பட்ஜெட்டாக தாக்கல் செய்திருப்பதாக’ குறிப்பிட்டார்.

12:50 PM :  திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

12:40 PM : வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம்

வருமான வரி உச்ச வரம்பு 2.5ல் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு. இதன் மூலம் 3 கோடி பேர் பயனடைவார்கள். டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரிப்பிடித்தம் இல்லை.

வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு அளிக்கப்படும். வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

12:30 PM :  வரி செலுத்துபவர்களுக்கு நன்றி

உங்களின் வரி கழிப்பறைகள் கட்டவும், இலவச கேஸ் இணைப்பு தரவும் உங்களின் வரிப்பணம் உதவுகிறது. 50 கோடி மக்களின் மருத்துவ செலவிற்கு உங்களின் வரிப்பணம் உதவுகிறது.

12:20 PM : தற்போது இருக்கும் நிதி நிலை பற்றாக்குறை 3.3% -த்தை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

12:15 PM : 2030ம் ஆண்டிற்குள் இந்தியா பல்வேறு துறைகளில் தன்னிறைவு அடையும்

12:10 PM : பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் மூலமாக 1.03 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளி வந்துள்ளது. ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

12:01 PM : ரயில்வே துறைக்கு 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவிப்பு. தேசம் முழுவதும் ஆளில்லா ரயில்வே கிராசிங் குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏற்படும் விபத்துகளும் குறைந்துள்ளது.  வடகிழக்கு மாநிலங்களில் ரயில்வே சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12:00 PM : 5 ஆண்டுகளில் 34 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

11:59 AM : செல்போன் டேட்டா பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 15%க்கும் மேல் அதிகமடைந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே செல்போன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உருவாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

11: 49 AM : முத்ரா திட்டத்தின் கீழ் 70% பெணகள் பயனடைந்துள்ளனர். 7.23 லட்சம் கோடி

11:45 AM : பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு.

11:43 AM : கூடுதலாக 8 கோடி இலவச கேஸ் இணைப்புகள் தரப்படும்.

11:40 AM : பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் காமதேனு என்ற சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:37 AM : தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பை 10% இருந்து 14% மாக உயர்த்தப்படும்.

11: 35 AM : மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைக்கப்படும்.

11:32 AM : ரூபாய் 75 ஆயிரம் கோடி செலவில் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைவார்கள்.

11:30 AM : நலத்தட்டங்கள் குறித்து பியூஷ் கோயல்

இந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்த நலத்திட்டங்கள் குறித்து பேசி வருகிறார் கோயல்.  விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

17,04,000 – பிரதான் மந்திரி திட்டம் மூலம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

5 லட்சத்து 45 ஆயிரம் கிராமங்களுக்கு கழிப்பறை வசதிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டு 15 கோடி மக்களுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

வங்கிகள் மீது சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வாராக்கடன் 3 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

11:10 AM : பணவீக்கம் குறைந்துள்ளது

இந்தியா முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சுகாதாரம், குடிநீர், மின்சாரம் ஆகிய அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்துள்ளது இந்த அரசு.

மிக முக்கிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது இந்தியா. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மிகவும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.

அதனால் பண வீக்கம் 4.4 ஆக குறைந்துள்ளது. பணவீக்கத்தை குறைக்காமல் இருந்திருந்தால் செலவுகள் 35% அதிகரித்திருக்கும் என நிதி அறிக்கை உரையில் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

11:00 AM : நிதி அறிக்கை உரையை வாசித்து வருகிறார் நிதி அமைச்சர்

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். இந்த அரசின் 6வது மற்றும் இறுதி நிதி அறிக்கை உரையை வாசித்து வருகிறார் அவர்.

10:30 AM : பலத்த பாதுகாப்பில் இருக்கும் நிதி அமைச்சரவை வளாகம்

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அமைந்திருக்கும் நிதி அமைச்சரவை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Budget 2019 Live, Union Budget 2019 Live Updates

10:00 AM : நாடாளுமன்றம் வந்தார் பியூஷ் கோயல்

பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் விரைந்தார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல்

09:45 AM : குடியரசுத் தலைவரை நேரில் அழைத்தார் பியூஷ் கோயல்

ராஷ்ட்ரபதி பவனிற்கு நேரில் சென்று குடியரசுத் தலைவரை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி அமைச்சர் அழைப்பது வழக்கம். அது போலவே நேரில் சென்று தன்னுடைய அழைப்பை முன்வைத்தார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close