இன்று தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் தான் - மோடி திட்டவட்டம்

இந்த மசோதாக்கள் குறித்து அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வோம்

Interim Budget 2019 : நேற்று நாடாளுமன்றத்தில், இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதற்கு முன்பு 30/01/2019-ல் அனைத்துக் கட்சி கூட்டம், சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் தலைமையில் நடைபெற்ற போது, நிதியமைச்சர் பியூஷ் கோயல், பட்ஜெட் என்பது பட்ஜெட் தான். இடைக்கால பட்ஜெட்டோ, வோட் – ஆன் – கவுண்ட்டோ கிடையாது என்று குறிப்பிட்டார்.

பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள

48 மசோதாக்கள் பற்றி விவாதம் வேண்டும் – காங்கிரஸ்

இந்நிலையில், நேற்றைய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் தான் என்பதை திட்டவட்டமாக கூறினார். பாராளுமன்ற உள்த்துறை விவகாரங்களை கவனித்துவரும் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இது இடைக்கால பட்ஜெட் தான் என்று உறுதி அளித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட்டாக இல்லாமல் முழு பட்ஜெட்டாக இருந்தால் காங்கிரஸ் கட்சி தங்களின் முழு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்திருந்தார்.

இந்த கூட்டத் தொடரில் மக்களின் தேவைகள் குறித்தும், மேம்பாடு குறித்தும் விவாதங்கள் நடைபெறும். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்று மோடி கூறியுள்ளார்.

ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் 48 மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது குறித்த விவாதங்களுக்கு வெறும் நான்கு நாட்கள் தான் தரப்பட்டுள்ளன. அதுவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் நன்றி உரைக்கு பிறகு என்று கூறியுள்ளார். இந்த மசோதாக்கள் குறித்து அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க : நாட்டு மக்களின் நலனுக்காகவே அரசு திட்டங்கள் கொண்டு வருகிறது – பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர்

பி.ஜே.டி கட்சியின் பார்த்ருஹரி மஹ்தப் “இந்த கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமாக்க முன்வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Budget news in Tamil.

×Close
×Close