When and Where to Watch Budget 2019 Live Coverage: மத்திய பட்ஜெட் இன்று (ஜூலை 5) பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். பட்ஜெட்டில் இடம் பெறும் முக்கிய அறிவிப்புகள் தொடர்பான நேரலை தொடர்பான தகவல்கள் இங்கே…
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறை பதவியேற்ற பிறகு முதல் பட்ஜெட் ஜூலை 5-ல் (இன்று) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்க இருக்கிறார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதேசமயம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் முழு நேர பெண் அமைச்சர் இவர்தான். மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரயில்வே தொடர்பான அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை முந்தைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதில் வருமான வரிச்சலுகை, விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. தற்போதைய பட்ஜெட் உரையிலும் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மத்திய பட்ஜெட் நேரலையை தூர்தர்ஷனில் காணலாம். யு டியூப் சேனலிலும் பார்க்க முடியும். காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியது முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலும் ‘லைவ்’வாக பட்ஜெட் அப்டேட்களை காணலாம்.
பட்ஜெட் தொடர்பான விரிவான தனிச் செய்திகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் இடம் பெறுகின்றன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Budget News by following us on Twitter and Facebook
Web Title:Nirmala sitharaman union budget 2019 live streaming online
திமுக – காங். தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம்; இறுதி நிலையை எட்டுவது எப்போது?
சாதம் வடிநீர், சிறிதளவு எண்ணெய்… மிருதுவான சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!
Tamil News Today Live : வாக்காளர் தகவல் சீட்டை ஆதாரமாக கொண்டு வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம்
வெந்தயம்… கல் உப்பு… சாஃப்ட் இட்லி சீக்ரெட்: சிம்பிள் செய்முறை இங்கே!
கேரளா தங்கம் கடத்தல் வழக்கு : முதல்வருக்கு தொடர்பா? ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்