nirmala sithatraman budget : சுதந்திர இந்தியாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார் நிர்மலா சீதாராமன். மத்திய நிதியமைச்சராக இவர் பொறுப்பேற்ற பின்பு இன்றைய தினம் மக்களவையில் தனது முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களவையில் காலை 11 மணிக்கு 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவாசய நலன், சமானிய மக்களின் வளர்ச்சி, கல்வி, ஆராய்ச்சி, வரி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாகவும், இது இந்தியாவிற்கான பட்ஜெட் என்றும் மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வரலாற்றை திரும்பி பார்பபோமா?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை ஏராளமான பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் முதல் பட்ட்ஜெட் 1947 நவம்பர் 26ஆம் தேதி நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுவரை அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் லிஸ்டில் மொரார்ஜி தேசாயால் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக பா. சிதம்பரம் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து 2 ஆவது இடத்தில் உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட் உடன் சேர்த்தே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
நேரு, இந்திரா, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை ஒருங்கே பெற்றிருந்தனர். அந்த வகையில் நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி ஒருமுறை மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் பெண்மனி நிர்மலா சீதாராமன்:
இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன் இதுவரை இருந்த நிதியமைச்சர்கள் செய்து வந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எப்போதுமே பட்ஜெட் ஆவணங்கள் சிவப்பு நிற சூட்கேஸில் வைக்கப்பட்டே நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். ஆனால்,நிர்மலா சீதாராமன் சூட்கேஸுக்கு பாய் சொல்லி விட்டு சிவப்பு நிற துணியில் அரசாங்க முத்திரை பதித்து பட்ஜெட் ஆவணங்களை கையில் கொண்டு வந்தார்.
இதன் மூலம் முதன்முறையாக இதுப்போல் துணியில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்த முழு நேர பெண் நிதியமைச்சர் என சிறப்பை பெற்றார் நிர்மலா சீதாராமன்.
அதுமட்டுமில்லை மத்திய நிதி அமைச்சர் பதவியைப் பெற்ற 6-வது தமிழர் என்ற பெருமையை பெற்றவர் நிர்மலா சீதாராமன் தான். இதற்கு முன்பு ஆர்.கே.சண்முகம் செட்டியார், டிடி கிருஷ்ணமாச்சாரியார், சி.சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகியோர் நிதியமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளனர்.
read more.. Union Budget 2019 Speech
எங்கே சென்றாலும் நிர்மலா சீதாராமன் தமிழ் பெண்ணாகவே பார்க்கப்படுகிறார். அந்த தமிழ் பற்றோ என்னவோ இன்றைய பட்ஜெட்டில் வரி குறித்து கருத்தை பதிவு செய்ய புறநானாறு பாடலில் இடம்பெற்ற வரிகளை வாசித்தார்.
காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துபவர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதையும், ஒரு அரசன் எப்படி வரி வசூலிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வரிகளை மக்களவையில் கூறினார் நிர்மலா சீதாராமன்.