பயனர்களுக்கு ஷாக் கொடுத்த பேடிஎம், 2% கூடுதல் கட்டணம் அறிவிப்பு

PayTM Credit Card Charges: பேடிஎம்-ல் கிரெடிட் கார்டு மூலம் இ-வேலட்டில் பணம் ஏற்றினால் 2% கூடுதல் கட்டணம் .

PayTM Credit Card Charges: பேடிஎம்-ல் கிரெடிட் கார்டு மூலம் இ-வேலட்டில் பணம் ஏற்றினால் 2% கூடுதல் கட்டணம் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
paytm paytm credit card top up

paytm paytm credit card top up

Paytm Charges: டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேடிஎம், கிரெடிட் கார்டு மூலமாக தங்கள் இ- வேலட்டில் ஒரு மாதத்தில் ரூ .10,000க்கு மேல் போடும் பயனர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல்  வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment

மாதத்தில் எந்த கிரெடிட் கார்டு மூலமாகவும் ரூ .10,000 க்கு மேல் இ- வேலட்டில் சேர்த்தால் 1.75% + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று பேடிஎம்-ன் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது. இருப்பினும், டெபிட் கார்டுகள், யுபிஐ போன்ற பிற சேனல்கள் மூலம்  இ-வேல்ட் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படாது.

வெளிநாடுகளில் படிக்க வேண்டுமா ? ஊக்கத்தொகை அளிக்கும் நாடுகள் இவைதான்

சில ஆண்டுகளுக்கு முன்பே, இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டி திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற்றது.

Advertisment
Advertisements

இந்த முடிவால் பெரும்பான்மையான பேடிஎம் பயனர்கள்  பாதிக்கப்பட மாட்டார்கள் என்றாலும், ஒரு மாதத்தில் 10,000க்கும் அதிகமான செலவுகளைச் செய்யும் மக்கள் இதனால் சற்று பாதிக்கபடுவார்கள் என்று நம்பப்படுகிறது.

கிரெடிட் கார்டு வழியாக இ-வேலட்டில் பணத்தைச் சேர்ப்பதற்கு மொபிக்விக், ஃபோன்பே , அமேசன் பே போன்ற பேடிஎம் - ன் போட்டியாளர்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: