Common Credit Card Mistakes : இப்போது வாங்குங்கள், பின்பு பணம் செலுத்துங்கள் என்ற அடிப்படையில் தான் க்ரெட் கார்ட்கள் இயங்குகிறது. ரிவார்ட் பாய்ண்ட்கள், டிஸ்கௌண்ட்கள், கேஷ்கார்ட்கள் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
க்ரெடிட் கார்ட்கள் மூலம் பணம் எடுத்தால், பணம் எடுத்த நாளில் நாளில் இருந்து பெறப்பட்ட பணத்திற்கு 3.5% வரை கேஷ் அட்வான்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ஒரு வருடத்திற்கு 49.36% வரை அதிகரிக்க கூடும். எனவே மிகவும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நீங்கள் பணம் எடுத்தால் முடிந்த வரையில் திருப்பி செலுத்துவது நலம்.
ஒருவரால் முழுமையாக க்ரெடிட் கார்ட் தொகையை ஒரே நேரத்தில் செலுத்த இயலாது என்பதால் குறைவாக செலுத்திக் கொண்டே இருப்பதால் பிரச்சனை இல்லை என்று நம்புகிறார்கள். ஆனால் மீதம் இருக்கும் தொகைக்கான வட்டிக் கட்டணங்கள் கூடிக் கொண்டே இருக்கும். அதே போன்று அவுட் ஸ்டேண்டிங் பணத்திற்கான ஃபைனான்ஸ் சார்ஜ்ஜூம் கூடிக் கொண்டே இருக்கும்.
ஒரே நேரத்தில் முழுமையான கட்டணங்களையும் செலுத்த முற்படுங்கள். அல்லது மொத்த நிலுவை தொகையையும் இ.எம்.ஐயாக மாற்றி மாதத்தவணையில் செலுத்துங்கள். நிலுவைத் தொகையை வேறொரு கிரெடிட் கார்டுக்கு குறைந்த / வட்டி விகிதத்தில் மாற்ற முயற்சி செய்யலாம் அல்லது குறைந்த வட்டி விகிதத்தில் கடன் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட கடனைப் பெறலாம்.
கடன் வழங்குபவர்கள் அல்லது கிரெடிட் கார்டு வழங்குபவர்கள், 30%க்கும் அதிகமாக கடன் பெறுதலை கண்டு ஸ்கோர் மதிப்பினை குறைத்துவிடுவார்கள். எனவே, உங்கள் கிரெடிட் கார்டு உங்கள் மொத்த கடன் வரம்பில் 30% க்குள் செலவழிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் நீங்கள் செலவிடுகிறீர்கள் என்றால் உங்கள் கிரெடிட் கார்டு வழங்குநரிடம் உங்கள் கடன் வரம்பை அதிகரிக்குமாறு கோரவும் அல்லது உங்கள் மொத்த கடன் வரம்பை அதிகரிக்க கூடுதல் கிரெடிட் கார்டைப் பெறவும். இது உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தைக் குறைக்கும்.
வட்டி இல்லாத காலம் என்பது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையின் தேதி மற்றும் அது செலுத்த வேண்டிய தேதிக்கு இடையிலான காலத்தைக் குறிக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் கார்ட்களை பொறுத்து அது 20 நாட்கள் முதல் 52 நாட்கள் வரை நீளும். இந்த காலகட்டத்தில், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் வட்டி செலவை உரிய தேதியில் அல்லது அதற்கு முன்னர் திருப்பிச் செலுத்தும் வரை ஈர்க்காது. அதனால் நீங்கள் பெரிய பெரிய பொருட்கள் வாங்க இந்த காலத்தில் உங்கள் கார்ட்களை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் உங்களுக்கு ரிவார்ட் பாய்ண்ட்கள் வழங்கப்படும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் காலாவதி ஆகும் நாட்களை கணக்கில் கொண்டு அதற்கேற்ற வகையில் உங்களின் ரிவார்ட் புள்ளிகளை பயன்படுத்துங்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:5 common credit card mistakes and how to avoid them