ஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு!

இனி மக்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலேயே வங்கிக் கணக்குகளை சிரமம் இன்றி துவங்கி பயனடையலாம். 

Aadhaar address changing norms becoming very easy
Aadhaar address changing norms becoming very easy

Aadhaar address changing norms becoming very easy : பிறந்து வளர்ந்த ஊர் ஒரு இடமாக இருக்கும். ஆனால் வேலை தேடிக் கொண்டு வேறொரு ஊருக்கு வந்து சேர்பவர்கள் தான் மிக அதிகம். அங்கு வங்கிக் கணக்கினை துவங்க விருப்பம் தெரிவிப்பார்கள். ஆனால் அவர்களின் ஆதார் அடையாள அட்டை விலாசம் வேறொன்றாக இருப்பதால் பலருக்கும் வேலை பார்க்கும் இடங்களில் வங்கி சேவையை துவங்குவதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆதார் அடையாள அட்டையில் முகவரியை மாற்ற இருக்கும் நடைமுறை விதிகளை கொஞ்சம் தளர்த்த வேண்டும் என்ற வேண்டுகோள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் விதிமுறை தளர்வுகள் அனைத்தும் பண மோசடி தடுப்பு விதிமுறைகளின் கீழ் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஆதார் அட்டையில் தன்னுடைய முகவரியை மாற்ற விரும்பும் நபர்கள் தங்களின் சுய விளக்க கடிதம் மற்றும் புதிய முகவரி ஆகியவற்றை உள்ளிடக்கிய தரவுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (13/11/2019) அரசிதழில் வெளியிடப்பட்டது.

பெயர், இனிசியல், வயது, போன் நம்பர் ஆகியவற்றை மிக எளிய முறையில் இணையம் வழியாக நாமே மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த அறிவிப்பால் இனி மக்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலேயே வங்கிக் கணக்குகளை சிரமம் இன்றி துவங்கி பயனடையலாம்.

மேலும் படிக்க : வங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhaar address changing norms becoming easy gazette notification issued wednesday

Next Story
வங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாsbi news, sbi.com, sbionline.com in, ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ., பாரத ஸ்டேட் வங்கி, State Bank of India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com