Advertisment

Aadhaar Card : இத்தனை நாள் உங்களின் கேள்விக்கு பதில் இதோ! ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் எப்படி பெறுவது?

Order Aadhaar Reprint: எளிதாக உங்களின் ஆதார் கார்டை ரீப்ரின்ட் செய்து கொள்ள முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar Card Online

Aadhaar Card Online

aadhaar card reprint online : ஆதார் கார்டு தவிர மற்ற எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்கு ஆதார் தேவை என்றாகிவிட்டது. ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படியென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும் என்பதை சொல்லவே முடியாது.

Advertisment

எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்? பதற்றமே வேண்டாம். இத்தனை நாட்கள் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை இதோ.. ஆதார் தொலைந்தால் உடண்டியாக என்ன செய்ய வேண்டும்? ஆதார் தொலைந்தால் மீண்டும் பெறுவது எப்படி?

சமீபத்தில் UIDAI அறிமுகப்படுத்தியது ஆதார் கார்டை தொலைத்து விடும் மக்களுக்கு அதை திரும்பி ரி பிரிண்ட் செய்து கொள்ள ரூ50 செலுத்தி திரும்பி ரீப்ரின்ட் செய்து கொள்ளலாம் இதனுடன் இதில் GST ஸ்பீட் போஸ்ட் சேர்த்து இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டை உங்களின் ரெஜிஸ்டர் முகவரிக்கு 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது

. எனவே நீங்களும் உங்களின் ஆதார் கார்டை தொலைத்து விட்டிர்களா இதோ கவலைய விடுங்க கீழே குறிப்பிட்டுள்ள சில வழிமுறையை பின் தொடர்ந்தால் போதும் நீங்கள் எளிதாக உங்களின் ஆதார் கார்டை ரீப்ரின்ட் செய்து கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள்:

இணைய இணைப்பு, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி: நீங்கள் இழந்த ஆதார்/பதிவு ஐடி யை ஆன்லைனில் மீட்டெடுக்க உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். இது அத்தியாவசியமானது ஏனென்றால், ஆதாரை மீட்டெடுக்கப் பயன்படும் ‘ஓடிபி' (ஒரு முறை கடவுச் சொல்) ஐ விண்ணப்பதாரர் இதில் பெறுவார்.

வேறு எங்கும் போய் அலைய வேண்டாம்! உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா

பெறுவது எப்படி?

காணாமல் போன ஆதார் கார்டுக்குப் பதிலாக டூப்ளிகேட் பிரின்ட் எடுக்க நினைப்பவர்கள் “Retrieve Lost UID/EID” என்ற லிங்கினை க்ளிக் செய்யவும்.அந்தப் பக்கத்தில் உங்களுக்கு வேண்டியது ஆதார் எண்ணா அல்லது பதிவு எண்ணா என்பதைக் குறிப்பிட வேண்டும். பின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றைக் குறிப்பிடவும்

அதன் பிறகு உங்களது PC யில் புதிய பக்கம் திறக்கும், அங்கு உங்களின் 12 டிஜிட் ஆதார் நம்பர் அல்லது 16 டிஜிட் உள்ள வர்ஜுவல் ஐடென்டிபிகேஷன் நம்பர் Virtual Identification Number மற்றும் செக்யூரிட்டி கோட் (captcha) எனத் செய்ய வேண்டும்.

உங்களின் மொபைல் நம்பர் ரெஜிஸ்டராக இருந்தால் நீங்கள் send OTP என்பதில் க்ளிக் செய்யுங்கள், உங்களின் மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ராக இல்லை என்றால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிக் பாக்சில் க்ளிக் செய்யவும் மொபைல் நம்பர் ரெஜிஸ்டர் இல்லை என்பதை க்ளிக் செய்து proceed பட்டன் க்ளிக் செய்யவும்.

உங்களுக்கு எந்த பேமண்ட் மோட் வேண்டுமோ அதை செலக்ட் கொள்ளுங்கள் பிறகு பணம் கட்டலாம்

நீங்கள் பேமண்ட் செய்து முடித்ததும் உங்களுக்கு உறுதிப்படுத்தல் (confirmation message ) உங்களது ஸ்க்ரீனில் வரும் மற்றும் உங்களின் போன் நம்பரில் ரெபரென்ஸ் நம்பர் வரும் அதை SRN நம்பர் என அழைப்பார்கள் அதை வைத்து நீங்கள் ட்ராக் செய்ய உதவும்.

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment