aadhar card address change charges : ஆதார் கார்ட் மிக முக்கிய ஆவணமாக இந்தியாவில் கருதப்படுகிறத, எந்த ஒரு இடத்திலும் அடையாள சான்றுதலுக்கு இந்த ஆதார் தேவைப்படுகிறது. இதனுடன் இவ்வளவு முக்கியமாக இருக்கும் இந்த ஆதார் கார்ட் தொலைந்து போய் விடுகிறது மற்றும் மேலும் சிலருக்கு வைத்த இடம் தெரியாமல் மறந்து போவதும் உண்டு இதனுடன் இதில் ஒரே ஒரு ஆப்சன் என்றால் UIDAI வெப்சைட்டில் சென்று திரும்பி ரி பிரிண்ட் செய்வதே ஒரே ஒரு வழியாக அமையும்.
சமீபத்தில் UIDAI அறிமுகப்படுத்தியது ஆதார் கார்டை தொலைத்து விடும் மக்களுக்கு அதை திரும்பி ரி பிரிண்ட் செய்து கொள்ள ரூ50 செலுத்தி திரும்பி ரீப்ரின்ட் செய்து கொள்ளலாம் இதனுடன் இதில் GST ஸ்பீட் போஸ்ட் சேர்த்து இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டை உங்களின் ரெஜிஸ்டர் முகவரிக்கு 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே நீங்களும் உங்களின் ஆதார் கார்டை தொலைத்து விட்டிர்களா இதோ கவலைய விடுங்க எளிதாக உங்களின் ஆதார் கார்டை ரீப்ரின்ட் செய்து கொள்ள முடியும்.
UIDAI Aadhaar Card : ஆதார் கட்டண விபரம்!
ஆதார் மையங்களில் முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், பாலினம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் திருத்த 25 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பையோமெட்ரிக் போன்ற தகவல்களைத் திருத்த 25 ரூபாய் கட்டணமும் வசூலிக்கின்றனர். இதுவே குழந்தைகளுக்கு இலவசமாகத் திருத்தம் செய்யப்படுகிறது.
கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க 100 ரூபாயும், ஆன்லைனில் தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கும், 30 ரூபாயும் செலுத்த வேண்டும் என ஆதார் எண்களுக்கான ஆணையம் (UIDAI ) கூறியுள்ளது.
How to Get Duplicate Aadhaar Card
ஆதார் கார்டு குறித்து மேலும் உங்களுக்கு உள்ள கேள்விகளை 1947 என்ற எண்ணை அழைத்து பதில் பெறலாம். மேலும், help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக ஆதார் ஆணையத்தை தொடர்புகொள்ள முடியும்.