இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு.. பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க!

aadhar pan link : பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கடைசி கெடுவினை வைத்துள்ளது.

By: Updated: August 10, 2019, 01:41:07 PM

aadhar card to pan link : பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. வருமானவரி தாக்கல் செய்வது, வருமானவரி பிடித்தம் திரும்பப் பெறுவது போன்றவற்றுக்கு இது இன்றியமையாத தேவையாக உள்ளது. ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு ரத்து செய்யப்படும்.

ங்களின் ஆதார் கார்டுடன் பேன் கார்டு இணைக்க சில நாட்களே உள்ளது. இணையத்தின் மூலம் ஆன்லைனிலேயே சுலபமாக இணைக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் அட்டையின் தேவை அத்தியாவசமாகி உள்ளது.

எந்த ஒரு அடையாளச்சான்றிற்கும் ஆதார் இன்று முக்கியமாகி உள்ளது. குறிப்பாக புதிய மொபைல் நம்பர், கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு போன்ற பல பயன்பாட்டிற்கு இன்று ஆதார் எண் பயன்படுத்தப்படுவது கட்டாயமாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு ஏற்கனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக்கொண்டது. அதற்காக ஏற்கனவே 5 முறை காலக்கெடுவினை அரசு அளித்தது. ஆனாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு கடைசி கெடுவினை வைத்துள்ளது.

ஆதார் எண்ணை பான் கார்டில் இணைப்பது மிகவும் எளிது ; இணைக்கும் வழிமுறை

ஆதார் இணைப்பை சரிபார்க்க

ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும். இதில் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை டைப் செய்து View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்து ஆதார் இணைப்பு செய்யப்பட்டுவிட்டதா என அறியலாம்.

இணைப்பது எப்படி?

1. https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Aadhar card to pan link aadhar pan link aadhar card pan card link aadhar card pan link app

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X