adhaar address update online : இந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார். நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. சமையல் எரிவாயு,பான் கார்டு,வங்கி கணக்கு,செல்போன் எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும் பெற ஆதார் இணைப்பு முக்கியம்.
நாம் வேலைக்காகவும், குடியிருப்பிற்காகவும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர வேண்டியுள்ளது. அவ்வாறு மாறும்போதெல்லாம் நாம் பெற்று வரும் அனைத்து சேவைகளிலும் புதிய முகவரியை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே போலத்தான் ஆதாரிலும் நமது முகவரியை மாற்றியாக வேண்டும்.
ஆனால் ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய,புதிய முகவரிக்கு வேறு அடையாள அட்டைகள் தேவைப்படும். இதற்கு சமையல் எரிவாயு இணைப்பு உங்கள் பெயரில் இருந்தால் முதலில் அதில் முகவரியை மாற்றிவிடுங்கள்.
How To Update Address in Aadhaar Card : ஆதாரில் முகவரி மாற்றும் முறை!
பின்பு அந்த ரசீதை வைத்து ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றிவிட்டு, அதை வைத்து ஆதாரை மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி இத்தனை நாள் வரை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இனிமேல் இதைவிடவும் ஈஸியான வழி வழக்கத்திற்கு வந்து விட்டது. மேலே குறிப்பிட்டுள்ள எந்தவித ஆவணங்களும் இல்லாமல் உங்களால் இனிமேல் ஈஸியாக ஆன்லைனில் ஆதார் வீட்டு முகவரியை மாற்றலாம்.
யருக்கெல்லாம் இது பொருந்தும்?
புதியதாக திருமணம் ஆகி மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றவர்கள், சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் புதியதாக குடியேறியவர்கள் இந்த வசதியை ஈஸியாக பயன்படுத்தலாம்.
செய்ய வேண்டியவை:
1. UIDAIயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும்.
2. நீங்கள் ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு பாஸ்வோர்டு வரும். அதை இங்கு டைப் செய்துவிட்டு LOGIN -ஐ கிளிக் செய்யுங்கள்.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான கட்டண விவரம்..
3. அடுத்து வரும் இந்த பக்கத்தில் ADDRESS -ஐ டிக் செய்து விட்டு SUBMIT கிளிக் பண்ணுங்கள்.இடத்தில் தான் நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அட்ரஸ் மாறி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நீங்கள் புதிய வீட்டு முகவரியை அதில் பதிவிட்ட பின்பு அதை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு ரகசிய எண் மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் ஆக வரும். அந்த நம்பரை மீண்டும் பதிவு செய்தால் போது ஈஸியாக வீட்டு முகவரியை மாற்றி விடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.