இனி இஷ்டம் போல ஷாப்பிங் பண்ணுங்க… ஓ.டி.பி தொல்லையில்லாம பணம் கட்டுங்க!

No OTP Upto Rs 2000 Online Transactions : இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு பண மோசடி தடுப்பு சட்ட விதிமுறைகள் 2005ல் சில மாற்றங்களை கொண்டு வந்தது.

By: January 16, 2020, 3:01:19 PM

Amazon Flipkart Transactionsion Without OTP : ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மிக சமீபத்தில் ரூ. 2000க்கும் குறைவாக பர்சேஸ் செய்யும் நபர்களுக்கு ஒ.டி.பி.யில் இருந்து விடுதலை அளித்துள்ளது. ஃப்ளிப்கார்ட்டின் விசா சேஃப் க்ளிக் என்ற புதிய ஆப்சன் மூலமாக இனி ஓ.டி.பி. பிரச்சனை இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ள இயலும். இந்த மாதத்தின் துவக்கத்தில் ஆர்.பி. ஐ வெளியிட்ட அறிவிப்பின்படி, குறைந்த அளவிலான பணப்பரிவர்த்தனைகளை கொண்ட பொருட்களை வாங்க ஓ.டி.பி. ப்ரோசசை நீக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதன் மூலமாக குறைந்த விலை உள்ள பொருட்களை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவது உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓ.டி.பி ஏன் தேவைப்பட்டது?

டெபிட் மற்றும் க்ரெட் கார்ட்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியம் வாய்ந்தது இந்த ஓ.டி.பி தான். கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பர்களுக்கு அனுப்பப்படுவதால் தேவையில்லாத பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வசதியாக இருந்தது. மேலும் அந்த ஒ.டி.பி இருந்தால் மட்டுமே ஒரு பணப்பரிவர்த்தனையை முடிக்க இயலும். சில பணப்பரிவர்த்தனைகளில் ஓ.டி.பியுடன் சேர்த்து 3டி செக்யூர் பின்கோடுகளையும் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் சமீபத்தில் ஆதாருடன் கூடிய வீடியோ கஸ்டமர் ஐடெண்டிஃபிகேசன் ப்ரோசசை அறிமுகம் செய்து வைத்துள்ளது. ( Video Customer Identification Process (V-CIP)). இதன் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்கள் குறித்த அனைத்து சந்தேகங்களையும் வீடியோ ஐடெண்டிஃபிகேசன் மூலம் நிறைவேற்றிக் கொள்வார்கள். இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு “பண மோசடி தடுப்பு சட்ட விதிமுறைகள் 2005”ல் சில திருத்தங்களை கொண்டு வந்தது.

மேலும் படிக்க : நெட்ஃப்ளிக்ஸில் இப்படி ஒரு வசதி இருக்கா… இதுநாள் வரை தெரியாம போச்சே!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Amazon flipkart transactions online transaction without otp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X