அடல் பென்சன் யோஜனா (Atal Pension Yojana -APY): அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் அதிகப்பட்சமாக ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5,000/- ஐ ஓய்வூதியமாக பெறலாம் என்ற போதிலும், மொத்த சந்தாதாரர்களில் கிட்டத்தட்ட 73 சதவிகித சந்தாதாரர்க்ள மார்ச் 31, 2020 வரை ரூபாய்.1,000/- ஓய்வூதியமாக தெரிவு செய்துள்ளனர் என்று PFRDA வால் கவனிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய தொகையை யாராவது மேம்படுத்த விரும்பினால் அதை செய்வதற்கான வழிகள் உள்ளன. எனவே ஒருவர் மாத ஓய்வூதியமாக ரூபாய் 1,000 அல்லது ரூபாய் 3,000/- சேமிக்கிறார் என்றால் அவர் தனது சேமிப்பை அதிகரிக்கவோ அல்லது மேம்படுத்தவோ செய்து 60 வயது முதல் மாத ஓய்வூதியமாக ரூபாய் 5,000/- பெறலாம்.
வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு உள்ள 18 முதல் 40 வயது வரை உள்ள ஒருவர் APY திட்டத்தில் பதிவு செய்யலாம். Auto-debit வசதியின் மூலம் வயதைப் பொறுத்து ஒருவர் மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு சேமிக்க வேண்டும். 60 வயது வரை சேமிக்க வேண்டும் அதற்குப்பிறகு மாதாந்திர ஓய்வூதியம் தொடங்கும். ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படுகிறது.
கொரோனா நிவாரணம்: அரசு சலுகையை அப்படியே வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி
மேப்படுத்த வேண்டுமென்றால் ஒரு படிவத்தை நிரப்பி வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஓய்வூதிய கணக்கில் கூடுதல் பங்களிப்பு செலுத்த, வங்கிக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். ஒருவர் வங்கியை தொடர்புக் கொண்டு ஓய்வூதிய தொகையை குறைக்கவும் செய்யலாம்.
APY chart – Contributions and corpus
APY யில் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் மாதத்திற்கு ரூபாய் 1,000/- அல்லது ரூபாய் 2,000/- அல்லது ரூபாய் 3,000/- அல்லது ரூபாய் 4,000/- அல்லது மாதத்துக்கு ரூபாய் 5,000/-.
APY கால்குலேட்டரின் படி, 18 முதல் 39 வயதுவரையிலான நுழைவு வயதில் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியமாக மாதத்துக்கு ரூபாய் 1,000/- கிடைக்க மாதாந்திர பங்களிப்பாக ரூபாய் 42 முதல் ரூபாய் 264 செலுத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”