டாப் 3 வங்கிகள் ஏ.டி.எம் சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் கட்டணம்!

3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

By: Updated: December 24, 2018, 04:39:42 PM

பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் என இரண்டையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், பலரின் யூகத்தின்படி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால், கடனாளி ஆகிவிடுவோம் என்ற சிந்தனை உள்ளது. வங்கியில் நம்முடைய கணக்கில் இருக்கும் பணத்தை நாம் செலவு செய்வதற்கு டெபிட் கார்டு பயன்படுகிறது.

அதே போல் வங்கிகள் குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை சேவைகளை  இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் அதே சமயத்தில் ஏ.எடி.எம்.மில் டெபிகார்ட் பணபரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களிடம் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண சேவை ஒவ்வொரு வங்கிக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தெரிந்துக் கொள்ளுங்கள்.. இதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்!

நம் வங்கிகளை சாராத பிற ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்-ல் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் வசூல் பொருந்தும்.

அதாவது, கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

தெரிந்துக் கொள்ளுங்கள்.. திட்டத்தின் முழு விவரம் உங்களுக்காக

இதோ டாப் 3 வங்கிகள் ஏடிஎம் சேவை பயன்பாட்டிற்கு உங்களிடம் வசூலிக்கும் கட்டணத் தொகை

1. எச்டிஎப்சி வங்கி:

>அக்கவுண்ட் தொடங்குபவர்களுக்கு இலவச டெபிகார்ட்.
> டெபிகார்ட் தொலைந்தால் 200.ரூ கட்டணம்
> முதல் 5 பணவரித்தனை சேவை முற்றிலும் இலவசம் (அனைத்து வங்கிகளின் ஏஎடிஎம்)
> ஒரு மாதத்திற்கு எச்எடிஎப்சி வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் முற்றிலும் இலவசம்.
>ஆனால். பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால்ரூ. 20 கட்டணம்.
> ஆண்டுந்தோறும் டெபிகார்டு கட்டணம் ரு. 150

2. ஐசிஐசிஐ வ்ங்கி:

3. எஸ்பிஐ வங்கி:

>கோல்ட் டெபிகார்ட்  கார்டு கட்டணம் ரூ.100 ப்ள்ஸ் ஜிஎஸ்டி
>ப்ளாட்டினம் டெபிகார்ட்  கார்டு கட்டணம் ரூ.306 ப்ள்ஸ் ஜிஎஸ்டி
>கிளாசிக் டெபிகார்ட்  கார்டு கட்டணம் ரூ.100 ப்ள்ஸ் ஜிஎஸ்டி
>டெபிட் கார்டு ஆண்டு கட்டணம் ரூ. 150
>டெபிகார்ட் தொலைந்தால் 200.ரூ கட்டணம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Atm rules charges levied by top banks for transactions and other services

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X