Atmanirbhar Bharat தொகுப்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 30,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள், மாநிலங்களிலிருந்து 40 சதவிகித பங்கை நம்பியிருக்கும்
Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) மற்றும் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டம் (Scheme for Formalisation of Micro Food Processing Enterprises FME) ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவையால் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
மீன்வளத் துறையில் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சியின் மூலம் இந்தியாவில் ஒரு நீல புரட்சியைக் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ள PMMSY திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட முதலீடு ரூபாய் 20,050 கோடி. இதில் ரூபாய் 9,407 கோடி மத்திய அரசின் பங்காகவும், ரூபாய் 4,880 கோடி மாநில அரசின் பங்காகவும் ரூபாய் 5,763 கோடி பயனாளிகளின் பங்காகவும் இருக்கும்.
PMMSY இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது, ஒன்று மத்திய பிரிவு திட்டம் (Central Sector Scheme (CS)) மற்றொன்று மத்திய நிதியுதவி திட்டம் (Centrally Sponsored Scheme). மத்திய பிரிவு திட்ட கூறில் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு நிதி முறை 90 சதவிகிதம் மத்திய அரசு பங்கும் 10 சதவிகிதம் மாநில அரசு பங்கும் என்ற அடிப்படையில் இருக்கும். மற்ற மாநிலங்களுக்கு 60 சதவிகிதம் மத்திய அரசு பங்கும், 40 சதவிகிதம் மாநில அரசு பங்கு என்ற அளவில் இருக்கும். அதே சமயம் யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவிகிதம் மத்திய அரசு பங்காக இருக்கும்.
அதேசமயம் PMMSYன் மத்திய நிதியுதவி திட்ட கூறில் முழு திட்டம் / அலகு செலவும் மத்திய அரசால் ஏற்கப்படும் (அதாவது 100 சதவிகித மத்திய நிதி ).
இந்த திட்டம் நிதி ஆண்டு 2020-21 முதல் நிதி ஆண்டு 2024-25 வரையிலான 5 வருட கால அளவில் செயல்படுத்தப்படும். இது மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் மீன் தொழிலாளர்களின் வருமானத்தை 2024 க்குள் இரட்டிப்பாக்க உதவும்.
ரூபாய் 20.97 லட்சம் கோடி Atmanirbhar Bharat தொகுப்பின் மூன்றாவது பகுதியில் PMMSY, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி வழங்கப்பட்ட 2019-20 க்கான பட்ஜெடில் PMMSY முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வங்கிக் கடனாளிகள் இன்னும் கொஞ்சம் மூச்சு விடலாம்: எஸ்பிஐ கூறும் நல்ல செய்தி
Atmanirbhar Bharat தொகுப்பில் அறிவிக்கப்பட்ட மற்றொரு திட்டமான குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டமும் (Scheme for Formalisation of Micro Food Processing Enterprises FME) மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டம் ரூபாய் 10,000 கோடி முதலீட்டில், 60:40 நிதி பங்கீட்டில் இருக்கும். அதாவது மத்திய அரசு 60 சதவிகித செலவையும் மாநில அரசுகள் மீதமுள்ள 40 சதவிகித செலவையும் ஏற்கும்.
இந்த திட்டமும் நிதி ஆண்டு 2020-21 முதல் நிதி ஆண்டு 2024-25 வரையிலான 5 வருட கால அளவில் செயல்படுத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.