Advertisment

8.50 சதவீதம் வட்டி: பிரபல வங்கியில் புதிய எஃப்.டி அறிமுகம்!

இந்த புதிய ஃபிக்ஸட் டெபாசிட் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ 5,000 மட்டுமே ஆகும். இந்தப் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்..

author-image
WebDesk
New Update
fixed deposit interest rates, sbi, hdfc bank, icici bank, punjab national bank, fd rates compared

ஏயூ (AU) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU SFB), புதன்கிழமை (அக்.25) புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

AU Green Fixed Deposit | Fixed Deposits: ஏயூ (AU) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (AU SFB), புதன்கிழமை (அக்.25) ப்ளானட் ஃபர்ஸ்ட் ஏயூ (Planet First AU) க்ரீன் ஃபிக்ஸட் டெபாசிட்-ஐ அறிமுகப்படுத்தியது.

இது, சூரிய சக்தி, மின்சார இயக்கம் தீர்வுகள் போன்ற புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமையான திட்டங்களை ஆதரிக்கிறது.

இந்த புதிய ஃபிக்ஸட் டெபாசிட் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ 5,000 மட்டுமே ஆகும்.

Advertisment

இதையும் படிங்க :ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி: இந்த 5 வங்கியை நோட் பண்ணுங்க

மேலும் இந்த பசுமை வைப்பு திட்டம் மற்றும் கட்டமைப்பானது காலநிலை நடவடிக்கை மீது கவனம் செலுத்துகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி நோக்கங்களுடன் ஒத்துப்போகும் டெபாசிட் காலத்தையும் தேர்வு செய்யலாம்.

இது குறித்து. AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிறுவனர் மற்றும் MD & CEO, சஞ்சய் அகர்வால் கூறுகையில், "இந்த அறிமுகத்தின் மூலம், நாங்கள் இன்னும் பெரிய படியை எடுத்து வைத்துள்ளோம்.

'Planet First - AU Green Fixed Deposit' ஐ அறிமுகப்படுத்திய முதல் சில வங்கிகளில் நாங்களும் ஒன்றாக இருப்போம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment