திருமணத்திற்கு லோன் வாங்கணுமா? பஜாஜ் பின்சர்வ் உங்களுக்கு செட் ஆகலாம்!

திருமணத்திற்காக பர்சனல் லோன் அல்லது திருமண லோன் எடுக்க பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) போன்ற நிறுவனங்கள் கணிசமான நிதி உதவி செய்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் சேமிப்பு பணத்தில் பல லட்சத்தை திருமணத்தின் வேறு பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. அதேபோல் ஆன்லைன் விதிகள் காரணமாக நீங்கள் எளிதாக நேரம் செலவளிக்காமல் பணத்தை நிர்வகிக்க முடியும்.

உங்களுக்கு கடன் கொடுப்பவர்களின் தகுதி வரம்புகளை சோதனை செய்யுங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் கல்யாண லோன் வாங்க விண்ணப்பிக்கும் முன் அவர்கள் அளித்திருக்கும் தகுதி வரம்புகளை சோதனை செய்திடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் லோன் ரத்து செய்யப்படுவதை தவிர்த்து, மிக சரியான நேரத்தில் லோன் பெற முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ புதிய அறிவிப்பு – மறுபடியும் பேங்க் போக வச்சுட்டாங்களே!!

வயது வரம்பு: உங்கள் வயது வரம்பு மூலம் நீங்கள் போதுமான வருடங்கள் பணியாற்றி இருக்கிறீர்களா என்று வங்கிகள் பார்க்கும். பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் திருமணத்திற்காக பர்சனல் லோன் அல்லது திருமண லோன் எடுக்க நீங்கள் 23-55 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: உங்களது கடனுக்கும் உங்களது வருமானத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பது பொதுவாக நிறுவனங்கள் சோதிக்கும். அதேபோல் உங்களின் கடனை திருப்பி அளிக்கும் திறனை பார்ப்பதற்காக உங்களுக்கு குறைந்த பட்ச சம்பள கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது இடங்களைப் பொறுத்து மாறுபடும்.

எப்போதும் அதிக சம்பளம் வாங்குவது மட்டுமே முக்கியம் கிடையாது, நிலையான சம்பளம் வாங்குவதும் முக்கியம். நீங்கள்தான் உங்கள் கடனை நீண்ட காலத்திற்கு அடைக்க போகிறீர்கள். அதனால் நீங்கள் பெரிய நிறுவனம், எம்என்சி அல்லது அரசு, தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்.

சிபில் ஸ்கோர்: பொதுவாக திருமண லோன்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என்பதால், சிபில் ஸ்கோர் அதிக கவனத்திற்கு உள்ளாகும். உங்கள் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்களால் விருப்பப்பட்ட லோன்களை எடுக்க முடியும். அதைவிட கொஞ்சம் குறைந்த சிபில் ஸ்கோர் கூட ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அப்படி இருந்தால் நீங்கள் குறைந்த பணமே லோனாக பெற முடியும் அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.

எஸ்.பி. ஐ வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டுமா? இந்த ஈசியான வழியை தெரிஞ்சுக்கோங்க!

பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் நீங்கள் லோனுக்கு விண்ணப்பித்தால் பின் வரும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.

KYC ஆவணங்கள், நிறுவன ஐடி கார்ட், கடைசி இரண்டு மாத சம்பள ஸ்லிப், கடைசி மூன்று மாத சம்பள கணக்கு ஸ்டேட்மென்ட்.

பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) மூலம் 25 லட்சம் ரூபாய் வரை திருமண லோன் பெற முடியும். உங்கள் லோனை 60 மாதத்தில் திரும்ப செலுத்தலாம், மேலும் Flexi Loan மூலம் இன்னும் எளிதாகவும் பணம் செலுத்தலாம். அதே சமயம் நீங்கள் தேவையான நேரத்தில் இதில் கடன் வாங்கி அதற்கு மட்டும் தனியாக வட்டி செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் interest-only installments முறையை அனுமதிப்பதால் நீங்கள் உங்கள் மாத லோன் செலவில் 45% வரை கட்டுப்படுத்த முடியும். எல்லாம் போக உங்கள் ஆன்லைன் லோன் செயல்பாட்டை இன்னும் எளிதாக்க நீங்கள் பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) ஏற்கனவே உங்களுக்கு அளிக்க தயாராகி இருக்கும் pre-approved கடனை சோதித்து பார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் உடனடியாக முறையாக லோன் பெற முடியும்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close