பொதுமக்களே உஷார்! 5 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம்.

Bank May Remain Close for 5 Days in December: பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

வேலை நிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை என வங்கி சேவை தொடர்ந்து 5 நாட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை (21-ம் தேதி) நாடு முழுவதும் வங்கிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

Bank Unions Strike in December May Cause Banking Transactions: வங்கிகள் 5 நாட்கள் முடங்கும்!

போராட்டம் காரணமாக 24-ம் தேதி தவிர 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. அதே போல் 22-ம் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ம் தேதி) தவிர 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

போராட்டம், பண்டிகைக்கான விடுமுறை என வரிசையாக நிற்பதால் வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

வீட்டில் இருந்த படியே வங்கியில் கணக்கை தொடங்கலாம்! எப்படி?

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்த விழாக்கால கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் வங்கி சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பணப்பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிமாற்றம் என பொதுமக்களின் அனைத்து சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

வாசிக்க.. பெர்சனல் லோன் பெறுவது மிக மிக சுலபம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close