Advertisment

பெர்சனல் லோன் பெறுவது மிக மிக சுலபம்.. எப்படி தெரியுமா?

பெர்சனல் லோனிலே எத்தனை வகை இருக்கிறது தெரியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெர்சனல் லோன்

பெர்சனல் லோன்

பண்டிக்காலம் நெருங்கி விட்டது. விழாக்காலங்களை கொண்டாட பலரும் பலவிதமான திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. சிலர் புது வீடு கட்ட திட்டமிடல், வாகனங்களை வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குதல் என பல ஐடியாவில் இருப்பீர்கள்.

Advertisment

சிலர் வங்கிகளில் பெர்சனல் லோன் எடுக்கலாமா? என்ற கேள்வியுடனும் சுற்றி வருவீர்கள்.பலருக்கும் வங்கியில் இருக்கும் பெர்சனல் லோன் பற்றி தெரியும்? ஆனால் அந்த பெர்சனல் லோனிலே எத்தனை வகை இருக்கிறது தெரியுமா?

எந்த லோனிற்கு குறைந்த வட்டி, எந்த லோன் அப்ளே செய்தால் உடனே கிடைக்கும் என பல்வேறு தகவல்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.

மிஸ் பண்ணாதீங்க... ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட் வேணுமா?

1. தொழில் கடன்:

புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் தொழில் கடன் உதவும். உங்களின் தகுதி மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து தொழில் கடன் நிர்ணயிக்கப்படுகிறது. இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 1 முதல் 6 ஆண்டுகள் ஆகும்.

இதற்கான வட்டி விகிதம் 17 முதல் 22 சதவீதம் வரை. குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 75 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

2. நிரந்தர விகிதக் கடன்:

இந்த நிரந்தர விகிதக் கடனுக்கு ஒரே அளவிலான வட்டிவிகிதம்தான் விதிக்கப்படும். கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை முன்பே தெரிந்துக் கொள்ளலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும்போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.

இக்கடனின் கால அளவு 5 முதல் 10 ஆண்டுகள். வட்டி விகிதம் 9.95 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை. கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். மீதமிருக்கும் அசலில் 2 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பதை மறந்து வீடாதீர்கள்.

ப்ளிஸ் படியுங்கள்.. இனிமேல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பிரச்சனையே இல்லை!

3. நுகர்வோர் நீடிப்பு கடன்:

வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவதற்கு உதவுவது தான், நுகர்வோர் நீடிப்பு கடன்.இதன் கால அளவு 2 ஆண்டுகள். குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாகப் பெறப்படும்.

மிஸ் பண்ணாதீங்க.. பிக்சட் டெசாபிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் ஐசிஐசிஐ!

4. விடுமுறை காலக் கடன்:

விடுமுறை காலக் கடன் என்பது குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே. இக்கடன் வட்டி விகிதம் அதிகம் இக்கடனின் மொத்த தொகை, நீங்கள் பயணம் செல்லவிருக்கும் இடம் மற்றும் உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.

விடுமுறை காலக் கடனின் கால அளவு 2 முதல் 3 ஆண்டுகள். வட்டி விகிதம் 12.95 முதல் 14.20 சதவீதம் வரை. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 10 ஆயிரமும், அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் பெறலாம். பரிசீலனைக்கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.

தெரிந்துக் கொள்ளுங்கள்... ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கியில் இப்படி ஒரு திட்டமா?

.

Sbi Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment