ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட் வேணுமா? எஸ்.பி.ஐ உங்களை வரவேற்கிறது!

எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிக சிறப்பான ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு திட்டம்

வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பர்களின் மிகப் பெரிய  கவலை மினிமம் பேலன்ஸ் குறித்து தான். அவசரத்திற்கு நாம் பணம் எடுக்கலாம் என்று நினைத்தால் வங்கியின் நிபந்தனைப்படி குறிப்பிட்ட தொகையை மினிமம் பேலன்சாக கணக்கில் வைக்க வேண்டும்.

மிஸ் பண்ணாதீங்க… பிக்சட் டெசாபிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் ஐசிஐசிஐ!

அப்படி இல்லையென்றால் வங்கி அபராதத் தொகையை கட்ட வலியுறுத்தும். அந்த அபராதத் தொகையை கட்ட தவறினால் அதற்கும் சேர்த்தும் ஒரு குறிப்பிட்ட எக்ஸ்ட்ரா தொகையை செலுத்த வேண்டும். இந்த பிரச்சனையாலே பலரும் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடர்வதற்கு முன்பு பல்லாயிரம் முறை யோசிக்கின்றனர்.

மேலும் படிக்க.. பெர்சனல் லோன் பெறுவது மிக மிக சுலபம்

இந்த அச்சத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து போக்கும் நோக்கில் எஸ்.பி.ஐ வங்கி ஜீரோ பேலன்சில் சிறப்பான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதோ எஸ்.பி.ஐ  வங்கியில் இருக்கும் மிக சிறப்பான ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு திட்டம்..

BSBD வங்கிக் கணக்கு:

  1. எஸ்.பி.ஐ- யின் இந்த சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் அதற்காக வங்கிகள் அபாராதத் தொகை விதிக்காது.
  2.  அதே போல் இந்த கணக்கில் டெபிட் கார்டுகள் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகின்றன.
  3. பணப்பரிவர்த்தனைக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
  4.  அதே போல் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
  5.  ஆனால் அதே சமயத்தில் பணம் பரிமாற்றத்தை அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
  6. இந்தக் கணக்கில் நீங்கள் 1 கோடி ரூபாய் வரையிலான இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.
  7. ஆனால் மற்ற சேமிப்பு கணக்கில்  வங்கி அளிக்கும் வட்டிவிகிதம் இந்த செமிப்பு கணக்கும் பொருந்தும்.

அவ்வளவு தான்  உடனே செல்லுங்கள் அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கிக்கு, ஜீரோ பேலன்சில்  BSBD வங்கிக் கணக்கை  தொடங்குகள்.

 

படிக்க… ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கியில் இப்படி ஒரு திட்டமா?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close