முன்பெல்லாம் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்றால் முதலில் வங்கிக்கு நேராக செல்ல வேண்டும். அங்கு சென்ற பின்பு முறையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பின்பு வங்கியின் நிபந்தனை புத்தகத்தை தெளிவாக வாசிக்க வேண்டும்.
அதன் பின்பு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது பிக்சட் டெபாசிட் கணக்கை தொடர வேண்டும்.சில வகையாக கணக்கு உடனே ஆக்டிவேட் ஆகிவிடும். சில சேமிப்பு கணக்கு 15 நாட்கள் கழித்து ஆக்டிவேட் ஆகும்.
ஆனால் இனிமேல் அப்படி இல்லை. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கிக்கு நேரில் செல்லாமலே வீட்டில் இருந்தப்படியே உங்களுக்கு தேவையான சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
read more… ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட் வேணுமா?
அதுவும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை இல்லாமல் சேமிப்பு கணக்குகளைத் திறக்கும் திட்டத்தினை எஸ்.பி.ஐ அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் படி எஸ்.பி.ஐ இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்குத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
ஆனால் இந்தச் சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே ஆகும்.
எப்படி தொடங்கலாம்?
எஸ்.பி.ஐ-ன் யோனோ செயலியின் மூலம் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். எந்த ஒரு ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்காமல் பேப்பர் ஏதும் இல்லாமல் இந்தச் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இந்த செயலியை டவுன்லோட் செய்துக் கொள்ளலாம். இந்த செயலியில் இன்ஸ்டா சேமிப்பு கணக்குகளை தொடங்குபவர்களுக்கு ரூபே டெபிட் கார்டு அளிக்கப்படுகிறது.
dont miss it… பெர்சனல் லோன் பெறுவது மிக மிக சுலபம்
ஒரு வருடத்திற்குள் தேவைப்படும் போது இந்த இன்ஸ்டா சேமிப்புக் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்காகவும் உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். அதற்கு உங்கள் அருகில் உள்ள வங்கி கிளையை அணுக வேண்டும்.. 18 வயது முடிந்த இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தக் கணக்கினை தொடங்கலாம்.