Advertisment

மே மாதத்தில் 10 நாட்கள் வங்கி செயல்படாது; எந்தெந்த நாட்கள் தெரியுமா?

மே மாதத்தில் தேசிய விடுமுறை உள்பட பல்வேறு மாநிலங்களின் தனிப்பட்ட விடுமுறை காரணமாக வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது. விடுமுறை பட்டியல் இங்கே.

author-image
WebDesk
New Update
Tamil news today live Bank Strike

Tamil news today live Bank Strike

Bank Holidays In May 2022 full list here: இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் மே மாதத்தில் பல்வேறு விடுமுறைகள் காரணமாக பத்து நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டரின் படி, மே மாத தொடக்கத்தில் வங்கிகள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

Advertisment

விடுமுறை நாட்கள் குறிப்பிட்ட மாநில விழாக்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், தேதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு விடுமுறை இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது, அதன்படி விடுமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எனவே வங்கி தொடர்பான ஏதேனும் வேலைகள் இருந்தால், வங்கிக் கிளைக்குச் செல்வதற்கு முன், இந்த முக்கியமான தேதிகளை உங்கள் மனதில் கண்டிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மே 2022 வங்கி விடுமுறைகளின் முழு பட்டியல்

மே 1 (ஞாயிறு): மே தினம் - நாடு முழுவதும்

மே 2 (திங்கட்கிழமை): மகரிஷி பரசுராம் ஜெயந்தி - பல மாநிலங்கள்

மே 3 (செவ்வாய்கிழமை): இதுல் பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகா)

மே 4 (புதன்கிழமை): இதுல் பித்ர் – தெலுங்கானா

இதையும் படியுங்கள்: சிறந்த வரி சேமிப்பு முதலீட்டு திட்டங்கள்; எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

மே 9 (திங்கட்கிழமை): குரு ரவீந்திரநாத் ஜெயந்தி - மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா

மே 13 (வியாழன்): இதுல் பித்ர் – தேசிய விடுமுறை

மே 14 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

மே 16 (திங்கட்கிழமை): மாநில தினம், புத்த பூர்ணிமா - சிக்கிம் மற்றும் பிற மாநிலங்கள்

மே 24 (செவ்வாய்): காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் – சிக்கிம்

மே 28 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி விடுமுறைகள் நான்கு வகைகளில் தீர்மானிக்கப்படுகின்றன. தேசிய விடுமுறைகள் தவிர, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் போன்ற குறிப்பிட்ட நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Bank News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment