bank loan : மொத்த தமிழகமும் ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திருக்கும் இந்த நேரத்தில் உங்களுக்கு கைக்கொடுக்கிறது கூட்டுறவு வங்கிகள். நீங்கள் ரெடியா? உங்களிடம் ரேஷன் கார்டு மட்டும் இருந்தாலே போதும். நீங்கள் 50 ஆயிரம் வரை கடன் பெறலாம்.
bank loan: எப்படி பெறுவது?
ரேஷன் கார்டை காட்டினால் போதும் கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்களிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும், அதே போல் கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திக்க வேண்டும். அதே போல் கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு 3000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு வங்கியில் கொட்டி கிடக்கும் சிறப்பு சலுகைகள்:
1. கூட்டுறவுத்துறையால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனை 6 மாதத்திற்கு கட்டத் தேவையில்லை.
2. சாலையோர வியாபாரிகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், காய்கறி மற்றும் பூவியாபாரிகள் போன்ற சிறு கடைக்காரர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகலை மட்டும் வழங்கி 50,000 வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
3. குறைந்த வட்டியில் 350 நாட்கள் வரை தவணை முறையில் செலுத்தலாம்.
4. கோவிட் -19 சிறப்பு கடன் திட்டம் மூலம், 17 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ-யில் இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன்பு 2 முறை யோசிங்க! வட்டி முழு விவரம்
இந்த சிறப்பு சலுகைகளை முடிந்த வரை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து உதவலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil