Bank Tamil News: கோட்டக் வங்கி தனது சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை டெப்பாசிட்தாரர்களுக்கு குறைத்துள்ளது. சேமிப்பு கணக்கில் உள்ள உங்களது இருப்பு முன்பை விட இப்போது குறைவாகவே ஈட்டப் போகிறது. பல வணிக வங்கிகள் சேமிப்பு கணக்கு இருப்புகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தையே வழங்குகின்றன. உங்களுடைய சேமிப்பு வங்கி கணக்கு இருப்பில் தினசரி பராமரிக்கப்படும் இருப்பை பொருத்து வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. வட்டி காலாண்டு இடைவெளியில் செலுத்தப்படும்.
Advertisment
சில வங்கிகளின் சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களைப் பார்க்கலாம்
Kotak வங்கி
Advertisment
Advertisements
25 ஏப்ரல் 2020 முதல், வங்கி சேமிப்பு வைப்பு கணக்குக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவிகிதம், ரூபாய் ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்புகளுக்கு. ரூபாய் ஒரு லட்சம் வரையிலான இருப்புகளுக்கு ஆண்டுக்கு 3.50 சதவிகிதம் வட்டி விகிதம் அளிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு இது ஆண்டுக்கு 4 சதவிகிதம், ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்புகளுக்கு. ரூபாய் ஒரு லட்சம் வரையிலான இருப்புகளுக்கு 3.50 சதவிகிதம்.
15 ஏப்ரல் 2020 முதல் வங்கி சேமிப்பு வைப்பு கணக்குகளுக்கு 3.25 சதவிகிதம் வட்டி விகிதம் வழங்கப்படும், ரூபாய் 50 லட்சத்துக்கும் குறைவான இருப்புகளுக்கு. அதே நேரம் ரூபாய் 50 லட்சத்துக்கு அதிகமான இருப்புகளுக்கு (ரூபாய் 500 கோடி வரை) இது 3.75 சதவிகிதம்.
ஐசிஐசிஐ வங்கி
9 ஏப்ரல் 2020 முதல், சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் வழங்கப்படும், நாள் கணக்கு இருப்பு ரூபாய் 50 லட்சத்திற்கும் குறைவானதற்கு. அதே சமயம் ரூபாய் 50 லட்சத்திற்கும் அதிகமான இருப்புகளுக்கு 3.75 சதவிகிதம் நாள் கணக்கு இருப்பு.
பாரத ஸ்டேட் வங்கி
ஏப்ரல் 19 2020 முதல் வங்கி சேமிப்பு வைப்புகளுக்கு வட்டி விகிதம் 2.75 சதவிகிதம் வழங்கப்படும், ரூபாய் ஒரு லட்சம் வரையிலான இருப்புகளுக்கு. மேலும் ரூபாய் ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்பு உள்ள வைப்பு கணக்குகளுக்கு தற்போது 2.75 சதவிகிதம் வழங்கப்படுகிறது.
Bank of Baroda
ஏப்ரல் 1, 2020 முதல், சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் நாள் கணக்கு ரூபாய் ஒரு லடசத்துக்கும் குறைவான கணக்கு இருப்புகளுக்கு. மேலும் ஒரு லட்சத்துக்கு அதிகமான இருப்புகளுக்கு 3 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.
கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை கணிசமாக குறைத்து வரும் சூழலில், வங்கிகளின் நிதி செலவு எப்படியும் குறைந்து வருகிறது. விகிதங்கள் மேலும் குறைந்துவிட்டால், வைப்புத்தொகையாளர்கள் மாற்று சேமிப்பு விருப்பங்களைத் தேட வேண்டும், அவை சமமாக பாதுகாப்பானவையாக மற்றும் உடனடி பணப்புழக்கத்தை வழங்கும் விதமாக இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil