மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மீதான சிகரெட் மீதான சுங்க வரி அதிகரித்திருப்பதால் புகைபிடிப்பது ஒரு விலை உயர்ந்த பழக்கமாக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
Union Budget 2023-24 Live Updates
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் வரி விதிப்பு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, சிகரெட் மீதான வரி 16 சதவீதம் அதிகரிக்கப்படும் என என்று தெரிவித்தார். காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா மற்றும் ஐடிசி லிமிடெட் உள்ளிட்ட சிகரெட் நிறுவனங்களின் பங்குகள் இந்த அறிவிப்புக்குப் பிறகு பி.எஸ்.இ.யில் 5 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
பி.எஸ்.இ.யில் காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்கு 4.92 சதவீதம் சரிந்து ரூ.1,828.75 ஆகவும், கோல்டன் டுபாக்கோ 3.81 சதவீதம் குறைந்து ரூ.59.4 ஆகவும் உள்ளது. பங்குச்சந்தையில் ஐ.டி.சி.யின் பங்குகள் 0.78 சதவீதம் குறைந்து ரூ.349க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. என்.டி.சி இண்டஸ்ட்ரீஸ் 1.4 சதவீதமும், விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் 0.35 சதவீதமும் சரிந்தன.
சிகரெட் மட்டுமின்றி, தங்கத்தால் செய்யப்பட்ட நகைகளுக்கும், தங்கக் கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை மேலும் அதிகரிக்கும். இருப்பினும், ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்காக அடிப்படை சுங்க வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. அதேபோல் பொம்மைகள், சைக்கிள்கள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

“ஜவுளி மற்றும் விவசாயம் தவிர பிற பொருட்களின் அடிப்படை சுங்க வரி விகிதங்களின் எண்ணிக்கையை 21ல் இருந்து 13 ஆக குறைக்க முன்மொழிகிறேன். இதன் விளைவாக, பொம்மைகள், சைக்கிள்கள் ஆட்டோமொபைல்கள் உட்பட சில பொருட்களின் அடிப்படை சுங்க வரிகள், செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் உள்ளன என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் இந்த பட்ஜெட் ஓரளவு மகிழ்ச்சியை அளிக்கும். ஏனெனில் கேமரா லென்ஸின் தனிப்பயன் வரியைக் குறைக்கபதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “சில பாகங்கள் மற்றும் கேமரா லென்ஸ் போன்ற சாதனைங்களில் இறக்குமதி சுங்க வரியில் நிவாரணம் வழங்கவும், பேட்டரிகளுக்கான லித்தியம்-அயன் செல்கள் மீதான சலுகை வரியை மேலும் ஒரு வருடத்திற்கு தொடரவும் நான் முன்மொழிகிறேன்” என்று கூறியுள்ளார்.
தொலைக்காட்சிகளின் உற்பத்தியில் மதிப்புக் கூட்டலை ஊக்குவிக்கும் வகையில், டிவி பேனல்களின் திறந்த செல்களின் பகுதிகளுக்கான அடிப்படை சுங்க வரியை 2.5% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“