budget income tax : நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் வீட்டுக்கடன் மீதான மேலும் ஒன்றரை லட்சம் அளவுக்கான கடன் மீதான, வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.’
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் வருமான வரியை பொருத்தவரையில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன.
இந்நிலையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, ரூ.5 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு வரிசெலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என்ற நிலையே தொடரும் என அறிவித்தார்.
பான் கார்டு இல்லாதவர்களும் இனி எளிதாக வருமான வரி தாக்கல் செய்யலாம்
அதே நேரத்தில் வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் ரூ.2 லட்சம் வரை வருமான வரிச் சலுகை பெறலாம் என்ற அளவு, தற்போது மேலும் ஒன்றரை லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக்கடன் வட்டிக்கு செலுத்தப்படும் தொகையில் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும்.
ஆண்டுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 3% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள தொகையை காட்டிலும் கூடுதலாக ஒன்றரை லட்சம் ரூபாயை இனி, கணக்கில் காட்டிக்கொள்ளலாம். உரிமையாளர்கள், தாங்களே குடியிருக்கும் வீடுகளுக்குதான் இது பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Budget income tax announcement home loan interest tax
650 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள்; ஆரம்பமானது சென்னை புத்தகத் திருவிழா!
Tamil News Live : கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு!
நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!
பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் : இன்று புதுச்சேரி வருகிறார் மோடி!
பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!