கடந்த 2 வாரமாக எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சந்தித்து வந்த மிக முக்கிய பிரச்சனையான நெட் பேங்கிங் சேவை மீண்டும் சரிசெய்யப்பட்டு விட்டது.
எச்டிஎப்சி நெட் பேங்கிங்:
இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. தேவைப்படும் போது ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப முன்பு நிறைய மெனக்கெட வேண்டும்.
ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.
எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மேலும் பல வங்கிகள் பாதுகாப்பான மொபைல் பேங்கிங் அப்ளிகேசன் நடைமுறைப்படுத்தி வருகின்றன இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேசன் கடந்த ஐந்து நாட்களாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் கூறி இருந்தனர்.
தொடர்ந்து வாடிக்கையாளர்களின் புகார்களை சந்தித்து வந்த காரணத்தால், தங்களின் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து எச்டிஎப்சி நிறுவனம் சமீபத்தில் நீக்கியது.
இந்நிலையில் புதிய எச்டிஎப்சி செயலிக்கு பதிலாக பழைய எச்டிஎப்சி மொபைல் பேக்கிங் ஆப் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் பழைய செயலியில் பேஸ் ஐடி (Face ID) மற்றும் கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை போன்ற வசதிகள் இல்லை.
பழைய எச்டிஎப்சி வங்கி ஆப்பை எப்போதும் போல ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்ட் ஸ்டோர்கள் மூலம் பெறலாம். சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட், டெபிட்/கிரெடிட் கார்டு மற்றும் டீமேட் சேவைகளைப் பெற முடியும்.
மேலும் தெரிந்துக் கொள்ள..5 நாட்கள் வேலை செய்யாமல் போன எச்டிஎச்பி மொபைல் ஆப்
புதிய செயலியில் நிறைய வேலைகள் முழுமை அடையாமல் உள்ளது. அதனால் அவற்றை சரி செய்யும் வரை வாடிக்கையாளர்கள் பழைய செயலியை பயன்படுத்தலாம் எனவும் எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.