தனியார் மயமாகும் வங்கிகள்; புதிய பட்டியலில் சென்ட்ரல் பேங்க்

இந்த அறிவிப்பு வெளியான பிறகு ஜூன் 21 அன்று சிபிஐ மற்றும் ஐஓபி ஆகிய வங்கிகளின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Central Bank of India : மத்திய அரசின் டிவெஸ்ட்மென்ட் திட்டங்களில் வங்கிகளை தனியார்மயமாக்குவதும் ஒன்றாகும். ஏற்கனவே சிறு வங்கிகளை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சென்ட்ரல் பேங்க் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த இரண்டு வங்கிகளிலும், அரசின் பங்கு 5% ஆக உள்ளது. விரைவில் வங்கிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், டிவெஸ்ட்மென்ட்டிற்காக மேலும் பல வங்கி விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு; பேரிடர் காலத்திலும் நிம்மதியாக இருக்க “சூப்பர்” காப்பீடு

இந்த அறிவிப்பு வெளியான பிறகு ஜூன் 21 அன்று சிபிஐ மற்றும் ஐஓபி ஆகிய வங்கிகளின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்யப்படும் என்று கூறினார். அதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் இந்த பட்டியலில் அடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Central bank of india indian overseas bank shortlisted for divestment

Next Story
SBI Bank News: ஏ.டி.எம். கார்டு தொலைஞ்சு போய்ருச்சா? ஒரு போனில் உடனே புதிய கார்டு…SBI Bank Alert Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express