Changed PAN Card Application Format allows transgenders to Apply : பான் கார்டு (PAN - Permanent account number) பயன்பாட்டை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2018ம் ஆண்டு பட்ஜெட்டில், அதற்கான வழிமுறைகளை வகுத்ததோடு அமலும்படுத்தியது. தனிநபர் பயன்பாட்டில், பான் கார்டு ஒரு குறிப்பிட்ட அளவிலான பணப்பரிமாற்றத்திற்கு ( ரூ.50,000க்கு மேல்) பிறகு கட்டாயமாக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
பான் கார்ட் விண்ணப்ப படிவத்தில் மாற்றம்
தனிநபர் மட்டுமல்லாது தற்போது ஒரு நிறுவனம், அதன் நிர்வாக இயக்குநர், பங்குதாரர், டிரஸ்டி, ஆசிரியர், நிறுவனர், செயலாளர், தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனத்தின் முதன்மை அதிகாரி உள்ளிட்டோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் பான் எண்ணை பெற வேண்டும். நிதியாண்டில் ரூ.2,50,000க்கு மேற்பட்ட பண பரிமாற்றத்திற்கு, நிறுவனங்கள் கண்டிப்பாக பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் , 2018ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள், பான் எண்ணை பெற, மே மாதம் 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள், பான் எண்ணை பெற விண்ணப்பிக்கும்போது தந்தையின் பெயர் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தந்தை இல்லாமல், தாய் மட்டும் இருக்கும்பட்சதத்திலும் இது கட்டாயமாக உள்ளது. பான் கார்டில், தாய் பெயரும் இடம்பெற வழிவகை மேற்கொள்ள பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் வந்தநிலையில், மத்திய அரசு, இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
பான் கார்டு விண்ணப்ப படிவத்தில் பாலினத்தை குறிப்பிடும் பிரிவில், ஆண் மற்றும் பெண் என இரண்டு தேர்வுகளே இடம்பெற்றிருந்தது. இனி, மூன்றாம் பாலினத்தவரை குறிப்பிடும் வகையில் திருநங்கை என்ற ஆப்சனும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Aadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே !