Advertisment

Aadhaar Card : ஆதார் கார்ட் தொடர்பான உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே !

How to Apply, Download Aadhaar Card : உங்களின் ஆதார் எண்ட்ரோல்மெண்ட் எண்ணுடன் உங்களின் மொபைல் நம்பரை இணைத்து தரவும். இதற்கு 30 ரூபாய் கட்டணம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar Card in Tamil, How to Apply for Aadhaar Card

Aadhaar Card in Tamil, How to Apply for Aadhaar Card

 How to Apply, Download & Update Aadhaar Card in Tamil : நம்முடைய அடையாள அட்டையாக எங்கும் பயணிக்கும் ஒரு முக்கியமான ஆவணம் தான் இந்த ஆதார் கார்ட். இதனை வைத்துக் கொண்டு நீங்கள் வாக்களிப்பது முதல், வரிசெலுத்துதல் வரை அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆதார் கார்ட் என்றால் என்ன ? ( What is Aadhaar card? )

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், வாழும் ஒவ்வொரு மனிதனுக்குமானது இந்த ஆதார் அடையாள அட்டை. பல்வேறு ஆவணங்களை பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களுக்கு மாற்றாகவும் உள்ளது இந்த ஆதார். கண், கைரேகை போன்ற பயோ தகவல்களை பெற்று இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள 16 இலக்க எண் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆதார் ஏன் தேவைப்படுகிறது ? (Why do we need Aadhaar Card?)

வருமான வரி தாக்கல் செய்ய, நிரந்தர கணக்கு அட்டை எண் (PAN) வாங்க, பி.எஃப். மூலமாக ஓய்வூதியம் பெற, வீட்டு சமையல் எரிவாயு இணைப்பினை பெற, பாஸ்போர்ட் பெற, மத்திய/மாநில அரசுகள் அளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவியினைப் பெற நமக்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை எப்படி பெறுவது ? (How to apply for Aadhaar card?)

உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களுக்கு (Aadhaar enrolment center) செல்லுங்கள். அங்கு உங்களுக்கு அளிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பயோமெட்ரிக் தகவல்களையும் பதிவு செய்யுங்கள். பிறகு உங்களின் பிறப்பு, குடியிருப்பு, மற்றும் இன்னப்பிற ஆவணங்களின் அசல் மற்றும் நகல்கள் பரீசிலிக்கப்பட்டு, சரிபார்க்கப்படும். இந்த நடைமுறை அனைவருக்கும் ஒன்று தான். பிறகு 14-digit enrolment number கூடிய ரசீது தரப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை அறிந்து கொள்ளலாம்.

இந்திய அஞ்சல் மூலமாக உங்களின் ஆதார் அட்டை உங்களின் வீடு வந்து சேர்ந்துவிடும். மூன்று மாதங்கள் இதற்கான காலகட்டம் ஆகும். பல கோடி மக்களுக்கு ஆதார் அட்டையை உருவாக்கி அனுப்ப வேண்டும் என்பதால், அட்டைகள் உங்களின் கைக்கு கிடைக்க நேரம் ஆகலாம்.

ஆதார் ஸ்டேட்டஸை அறிந்து கொள்வது எப்படி ? How to check Aadhaar card status?

uidai.gov.in இணையத்திற்கு செல்லவும். தளத்தை ஓபன் செய்துகொள்ளுங்கள். - மை ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். பின்னர் அதில் செக் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷன் தோன்றும். அதில் அதில் உங்கள் கார்டின் 14 இலக்கு எண்ட்ரோல்மெண்ட் எண்ணை பதிவு செய்து, செக்யூரிட்டி கோடு எண்களையும் என்டர் செய்து செக் ஸ்டேட்டஸ் கிளிக் செய்து உங்களின் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி ? How to download Aadhaar card?

ஆதார் அட்டை விரைவில் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், இதனை பின்பற்றலாம்.  UIDAI இணையத்திற்கு சென்று, இ-ஆதார் அட்டையாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு உங்களிடம் enrolment number இருக்க வேண்டும்.

முதலில் அந்த படிவத்தில் enrolment number-ஐ பதிவு செய்ய வேண்டும். பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தினை குறிப்பிட வேண்டும்.

பின்னர் உங்களின் பெயர், பின்கோடு, மற்றும் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் அட்டை எண் உங்களுக்கு UIDAI மூலம் முன்பே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனை பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் ஆதாரை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

உங்களின் பெயர், பின்கோடு, மற்றும் மொபைல் எண்ணுடம், ஆதார் எண்ணை உள்ளீடாக தரவும்.

பிறகு உங்களுக்கு கொடுக்கப்பட்டும் ஒன் - டைம் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதாரை பெற்றுக் கொள்ளலாம்.

How to register mobile number in Aadhaar card? ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி ?

நீங்கள் உங்களின் ஆதார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதே, மொபைல் எண்ணையும் சேர்த்து தான் பதிவிடுவீர்கள். உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் மற்றும் ஆதார் தொடர்பான அப்டேட்டுகள், ஒன் - டைம் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பெற இந்த எண்ணை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது அவசியமாகிறது.

ஆதார் பதிவு செய்யும் போது நீங்கள் உங்களின் போன் நம்பரை பதிவு செய்யவில்லை என்றால், அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு செல்லுங்கள். உங்களின் ஆதார் எண்ட்ரோல்மெண்ட் எண்ணுடன் உங்களின் மொபைல் நம்பரை இணைத்து தரவும். இதற்கு 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆதாரில் போன் நம்பர் மற்றும் முகவரியை மாற்றுவது எப்படி ? ( How to update the address in Aadhaar card? )

UIDAI இணையத்திற்கு செல்லவும். அதில் மை ஆதார் என்ற டேக்கின் கீழ் அப்டேட் ஆதார் என்று இருக்கும் அதில் நீங்கள் உங்களின் முகவரி மற்றும் இதர தகவல்களை மாற்றிக் கொள்ளலாம்.

இது தொடர்பான முழுமையான தகவல்களையும் நீங்கள் இங்கே படிக்கவும்

பான் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ? How to link Aadhaar card with PAN card?

வருமானவரி இணையத்தின் கீழ் நீங்கள் பான் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாகவும் நீங்கள் இதனை செய்ய இயலும். செப்டம்பர் மாதம் 30ம் தேதி, 2019 வரை ஆதாருடன் பான்கார்ட் இணைக்காமல் இருந்தால் அவர்களின் பான் கார்ட் டிஆக்டிவேட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க 

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? How to link Aadhaar card with bank account?

உங்கள் கிளைக்கு சென்று, உங்களின் ஆதார் அடையாள அட்டையின் நகல் கொடுத்தால் வங்கியிலேயே அடையாள அட்டை எண் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுவிடும். இணைய வங்கி சேவைகளில் இது போன்ற ஆப்சன் இருப்பதால் நீங்கள் வங்கிக்கு செல்லாமலே உங்களின் ஆதார் எண்ணை இணைத்துவிட இயலும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment