Advertisment

வரும் 31 ஆம் தேதிக்குள் பான் கார்டில் ஆதார் இணைத்து விடுங்கள்! இல்லயென்றால் இதுதான் நடக்கும்!

பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PAN-Aadhaar linking

PAN-Aadhaar linking

PAN-Aadhaar linking: ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி ரிட்டர்ன் ஃபைல் செய்வோர் இந்த மாதத்துடன் தங்களது பேன் கார்டுடன் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க உடனடியாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்குகள்.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போதே, ஆதார் அட்டை மற்றும் பேன் கார்ட்டை இணையத்தில் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு tin-nsdl.com மற்றும் utiitsl.com லிங்குகளை பயன்படுத்தலாம்.

எஸ்எம்எஸ் வழி: 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12-digit Aadhaar> <10-digit PAN> என அனுப்பவேண்டும்.

இணையதளம்: incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்த இதனை செய்யலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில் "link Aadhaar" என்பதை கிளிக் செய்து இதனை செய்யலாம். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்.

‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்கவேண்டும்.வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும்.

உங்கள் சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பு உண்டா? அப்ப நீங்க சந்தோஷப்பட ஒரு நியூஸ் இருக்கு!

ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். வரிசெலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டியிருக்கும், அதாவது ஆதார் தரவுப்பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங்கைத் திருத்த வேண்டியிருக்கும்.

Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment