Advertisment

எஸ்.பி.ஐ வங்கியில் எதற்கெல்லாம் கட்டணம் தெரியுமா?

ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icici netbanking

ICICI Bank Latest Tamil News, ICICI Bank ATM Rules, ICICI Bank Rules Corona Outbreak, கொரோனா பாதிப்பு ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை சிறப்பாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை கட்டணமாகவும் வசூலிக்கிறது.

Advertisment

எந்தெந்த சேவைக்கு வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்கின்றன என்ற விவரத்தை இங்கே நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்.

1. ஏடிஎம்மில் பணம் எடுக்கும் கட்டணம்:

வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்ட் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்

2. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

கல்வி கடனில் அசத்தும் எஸ்.பி.ஐ... பெற்றோர்களே தெரிந்துக் கொள்ளுங்கள்!

3. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.

4. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

5. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

6. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

7. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.

படியுங்கள்... சேமிப்பு பணம் குறித்த பயமே வேண்டாம்! எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான வசதிகள்

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment