/tamil-ie/media/media_files/uploads/2020/06/a76-1.jpg)
india china border dispute, india china ladakh border situation, india china trade, chinese companies in india, இந்தியா, சீனா, இந்திய டெலிகாம், இந்திய ராணுவம், சீன ராணுவம், india telecom companies, indian railways, indian express news
இந்தியா, சீனா இடையிலான லடாக் எல்லைப் பிரச்சினையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பதட்டம் அதிகரித்திருக்கும் நிலையில், நாட்டில் சீன வணிகங்களுக்கு எதிராக முதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒரு சீன பொறியியல் நிறுவனம் இந்திய ரயில்வேயுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தை இழக்க உள்ளது. மேலும் தொலைதொடர்புத் துறை (டிஓடி), அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) க்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை அதன் மேம்படுத்தலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
ஒரே மகன் ராஜேஷ் ஓரங்கை நாட்டுக்காக இழந்த தந்தை: உருக்கமான பேட்டி
"பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதன் 4 ஜி வசதிகளை மேம்படுத்துவதில் சீனத் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று டிஓடி அறிவித்துள்ளது" என்று அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. "முழு டெண்டரும் இப்போது மீன்டும் புனரமைக்கப்படும்," என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் மொபைல் சேவை நிறுவனங்களிடம் “சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்க” “தீவிரமாக பரிசீலித்து வருவதாக” DoT அதிகாரி கூறினார். "தற்போதைய சூழ்நிலையில், சீன உபகரணங்களுடன் கட்டப்பட்ட நெட்வொர்க்குகளின் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஹவாய் மற்றும் ZTE ஆகியவற்றின் உரிமையாளர் முறைகள் இந்தியாவின் நெட்வொர்க் மேம்படுத்தல் திட்டங்களில் ஒரு முக்கிய புள்ளியாக மாறும்" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
அதேபோல், Eastern Dedicated Freight Corridorல் நடந்து வரும் ரயில்வே பாதையில், சீன சிக்னலிங் பெஹிமோத் சீனா ரயில்வே சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன் (சி.ஆர்.எஸ்.சி) கார்ப்பரேஷனின் ஒப்பந்தத்தை நிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 400 கி.மீ.க்கு மேற்பட்ட ரயில் பாதைகளில் சிக்னலிங் அமைப்புகளை நிறுவும் ஒப்பந்தத்தை சீனாவின், சி.ஆர்.எஸ்.சி 2016ல் பெற்றது . மெகா திட்டத்தில் சீனாவின் ஒரே இருப்பு இதுதான்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் ரூ .500 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் உத்தரபிரதேசத்தின் புதிய பாபூர்-முகலசராய் பிரிவில் 413 கி.மீ கொண்ட இந்த இரு வழித்தடத்தில், சமிக்ஞை, தொலைத்தொடர்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற பணிகள், கட்டமைத்தல், சோதனை செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
”அவனை நினைத்து பெருமை அடைகிறேன்” இந்தியாவுக்காக ஒரே மகனை இழந்த ராணுவ அதிகாரியின் தாய் உருக்கம்!
Dedicated Freight Corridor Corporation லிமிடெட் ஏற்கனவே இந்த பணியைத் தொடங்க, உலக வங்கிக்கு விண்ணப்பித்துள்ளது என்று தகவல்கள் தெரிவித்தன. ஒப்பந்தத்திற்கு பிறகு வேலையில் காட்டிய சுணக்கம் மற்றும் பிற பிரச்சினைகளே, ஒப்பந்த ரத்துக்கு காரணம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்கள் அதற்கு காரணமில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டி.எஃப்.சி.சி.ஐ.எல் நிர்வாக இயக்குனர் அனுராக் சச்சனை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக தொடர்பு கொண்ட போது, "அதிகாரப்பூர்வமாக முறைப்படுத்தப்படுவதற்கு முன்பு எங்கள் உள் முடிவு குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.