வட்டி இல்லாத கடன் காலத்துடன் ஆன்லைன் சலுகைகள், கேஷ்பேக் மற்றும் வெகுமதிகள் கொடுக்கப்படுவதால் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கடன் அட்டைகளின் (Credit Card) பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. மத்திய ரிசர்வு வங்கியின் (Reserve Bank of India) கணக்குப்படி கடந்த டிசம்பர் 2019 இறுதி வரை மொத்தமாக நிலுவையில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 55.33 மில்லியன். மேலும் அந்த மாதம் மட்டும் ரூபாய் 6660.904 பில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனை கடன் அட்டைகளின் மூலம் நடந்துள்ளது.
Advertisment
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாற அரசின் உந்துதல், தள்ளுபடிகள், கேஷ்பேக் சலுகைகள், எளிமையாக பண பரிவர்த்தனை செய்யும் முறை மற்றும் 45 நாட்கள் வரை கிடைக்கும் வட்டி இல்லா கடன் காலம் ஆகியவை கடன் அட்டைகளின் பரவலான பயன்பாட்டிற்கு பெரும்பாலும் பங்களிக்கின்றன. எனினும் அதிகப்படியாக கடன் அட்டைகளை பயன்படுத்துவது செலவை அதிகரிக்கும்.
நீங்கள் குறைந்தபட்ச செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தியுள்ளீர்கள் என்றால் என்ன நடக்கும்?
Advertisment
Advertisements
உங்கள் கடன் அட்டை கட்டணத்தை அதற்கான கடைசி தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ கட்டவில்லை என்றால் முழு தொகைக்கு பதிலாக அது ஒரு குறைந்தபட்ச தொகையை காட்டும் அதை நீங்கள் செலுத்தலாம். இந்த குறைந்தபட்ச தொகையை கடன் அட்டை கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு முன்னதாகவே கட்டலாம், இதன் மூலம் உங்கள் கடன் அட்டை கணக்கை பராமரிக்க முடியும். குறைந்தபட்ச செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தினாலும் கடன் அட்டைக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படமாட்டாது. இது கடன் அட்டை தாமத கட்டணத்தை மட்டுமே தவிர்க்கும். குறைந்தபட்ச செலுத்த வேண்டிய தொகை என்பது அசல் நிலுவை தொகையின் ஒரு சிறு பகுதி.
வழக்கமாக செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகைக்கான கணக்கீடு என்பது கடன் அட்டைதாரரின் அசல் நிலுவை தொகையில் 5 சதவிகிதம். நீங்கள் தவனை முறையில் எதையாவது உங்கள் கடன் அட்டையை பயன்படுத்தி வாங்கி உள்ளீர்கள் என்றால் இந்த சதவிகிதம் உயரும். நீங்கள் உங்கள் கடன் வரம்புக்கு அதிகமாக செலவு செய்துள்ளீர்கள் என்றாலும் அல்லது உங்கள் முந்தைய மாத செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வில்லை என்றாலும் குறைந்த பட்ச தொகை உயரும். செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்துவதால் நிலுவையில் உள்ள பில் தொகைகான வட்டியை தள்ளுபடி செய்யாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news